பாகிஸ்தான் நடிகர், நடிகைகளுக்கு தடை: அனைத்து இந்திய திரை தொழிலாளர் அமைப்பு அதிரடி

By ஏஎன்ஐ

புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தீவிரவாதி நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் அனைவரும் இந்தியத் திரைப்படங்களில் நடிக்கத் தடைவிதித்து அனைத்து இந்திய திரை தொழிலாளர்கள் அமைப்பு(ஏஐசிடபிள்யுஏ) அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா நெடுஞ்சாலையில் கடந்த வியாழக்கிழமை சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில், 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி வருகின்றனர். மேலும், ஒவ்வொரு தரப்பினரும், பாகிஸ்தானுக்கு வர்த்தகத்தில் நட்புறவு நாடு என்ற அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, இறக்குமதி பொருட்களுக்கு 200 சதவீதம் வரிவிதித்தது.

இதைத் தொடர்ந்து ஒவ்வொரு தரப்பினரும், ஒவ்வொரு வகையில் பாகிஸ்தானுக்கு தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றனர். இந்நிலையில் அனைத்து இந்திய திரை தொழிலாளர்கள் கூட்டமைப்பு, இந்தியாவில் எந்தவிதமான திரைப்படத்திலும் பாகிஸ்தான் நடிகர், நடிகைகள், கலைஞர்களை பயன்படுத்த தடைவிதித்துள்ளது.

இதுகுறித்து அனைத்து இந்திய திரை தொழிலாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

ஜம்முகாஷ்மீர் புல்வாமாவில் நமது வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை அனைத்து இந்திய திரைத் தொழிலார்கள் கூட்டமைப்பு தெரிவிக்கிறது. வீரர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம். மனிதநேயமற்ற இந்த தாக்குதலுக்கும், தீவிரவாதத்துக்கும் எதிராக நாங்கள் நிற்போம்.

இந்திய திரையுலகில் பாகிஸ்தானைச் சேர்ந்த எந்த நடிகரும், நடிகையும் பணியாற்ற தடை விதிக்கிறோம். ஒருவேளை எந்த அமைப்பாவது பாகிஸ்தானைச் சேர்ந்த கலைஞர்களை பணியமர்த்தினால், அவர்கள் மீது தடைவிதிக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேசத்துக்கு முக்கியத்துவம். தேசத்துக்காக துணை நிற்போம்

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ராஜ்தாக்ரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா(எம்என்எஸ்) அமைப்பு, பாகிஸ்தானைச் சேர்ந்த பாடகர்கள் இந்தியத் திரையுலகில் பாட தடைவிதிக்க வேண்டும், அவர்களை திரைத்துறையினர் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்