சண்டிகரைச் சேர்ந்த விமான லெப்டினென்ட் ஹினா ஜெய்ஸ்வால் முதலாவது பெண் விமானப் பொறியாளராக இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் வரலாற்றில் இந்தியாவின் முதல் பெண் விமான பொறியாளர் என்ற முத்திரையைப் பதித்துள்ளார்.
ஜெட் விமானங்கள், போர் விமானங்களில் சிக்கலான விமானக் கருவிகளை கையாள்வதற்கும் அவற்றின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்கும் சிறப்புமிக்க திறமை தேவைப்படும். அவ்வகையில் திறமைமிக்க ஹினா, விமானப் பொறியாளராக இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் செயல்பாட்டு பிரிவுகளில் பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவர் பெரும்பாலும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான ஆபத்து மிக்க அதிக குளிர்ச்சிமிக்க சியாச்சின் பனிப்பாறைகளில் சென்று பணியாற்ற அனுப்பப்படுவார்.
தவிர, அந்தமான் கடற்கரைப் பிரதேசங்கள், ஆளரவமற்ற எல்லைப்பகுதிகளில் என மிகவும் சிக்கலான பணியிடங்களிலேயே அவர் பணியாற்ற வேண்டியிருக்கும்.
ஹினா ஜெய்ஸ்வால் , பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை என்ஜீனியரிங் பட்டப்படிப்பு முடித்தவர். இதுகுறித்து ஏஎன்ஐயிடம் பேசுகையில் ''கனவு நிறைவேறிய உண்மையான தருணம்'' என்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ''என் குழந்தைப் பருவம் முதலே ராணுவத்தின் மீது மிகப் பெரிய மரியாதை எனக்கிருந்தது. அப்பொழுதே சிப்பாய்களின் சீருடைகளை அணிந்து அழகுபார்ப்பேன். விமானத்தில் ஒரு பைலட்டாக செல்லவேண்டும் என்றெல்லாம் நினைப்பேன்'' என்றார்.
கடந்த மாதம் (ஜனவரி) 5ம் தேதி அன்று இந்திய விமானப் படையின் பொறியியல் பிரிவில் ஹினா நியமிக்கப்பட்டபோதே அவரிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகள் சற்று கூடுதலானதுதான்.
விமான ஏவுகணை போர்ப்படைகளில் உள்ள தீயணைப்புப் படையில் தலைமைப் பொறியாளர் பணி. அவரது சக போர் வீரர்களிடம் இதற்கான பயிற்சிகளைப் பெற்றபோதே தனது முரட்டுத்தனமான ஆர்வத்தை நிரூபித்தார். அப்போது அவர் மிகவும்அர்ப்பணிப்புடனும் விடாமுயற்சியுடன் பயிற்சிப் பணிகளில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago