மக்களவை தேர்தலுக்குள்ளாக உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மேற்கொண்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர், உ.பி. காங்கிரஸின் முன்னாள் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களை தொடர்புகொண்டு பேசி வருகிறார்.
இவர்களில் பலரும், உ.பி.யில் காங்கிரஸில் இருந்து விலகியவர்கள். இவர்களிடம் புதிதாகப் பொறுப்பேற்ற தம்மை ஆசிர்வதிக்கும்படியும், வழிநடத்தும்படியும் பிரியங்கா உணர்ச்சிகரமாக பேசுவது அவர்களை மீண்டும் கட்சிப் பணியில் இறங்க வைத்துள்ளது.
காங்கிரஸில் இருந்து மற்ற கட்சிகளுக்கு தாவிய சிலரை பிரியங்கா உத்தரவின்பேரில், உ.பி.யின் சில முக்கிய தலைவர்கள் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். அவர்களை காங்கிரஸுக்கு திரும்பும்படியும் வலியுறுத்தி வருகின்றனர்.
இப்பணியின் பொறுப்பு, மாயாவதியின் கட்சியில் அவருக்கு வலதுகரமாக இருந்து தற்போது காங்கிரஸுக்கு வந்திருக்கும் நசீமுத்தீன் சித்திக்கிடம் பிரியங்கா அளித்துள்ளார்.
இதனிடையே, நாளை உத்தரபிரதேச தலைநர் லக்னோவில் நடைபெறும் முதல் கூட்டத்துக்கு மாநில காங்கிரஸார் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
நாளை மதியம் பிரியங்காவுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், மற்றொரு தேசிய பொதுச்செயலாளரான ஜோதிர் ஆதித்ய சிந்தியாவும் செல்ல உள்ளனர்.
ராஜ் பப்பர் மாற்றம்?
பிரியங்கா ஆலோசனையின்பேரில், உ.பி.யின் காங்கிரஸ் தலைவரும், பாலிவுட் நடிகருமான ராஜ் பப்பர் மாற்றப்பட உள்ளதாக தெரிகிறது. இந்த பொறுப்புக்கு முதன்முறையாக காங்கிரஸுக்கு உ.பி.யின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு என இரண்டு மாநிலத் தலைவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இதற்காக, உ.பி.யின் கிழக்கில் மாயாவதி கட்சியை சமாளிக்கும் வகையில் தலித் சமூகத்தை சேர்ந்தவரும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான பி.எல்.புனியா மற்றும் இம்ரன்மசூத்தின் பெயர்கள் ஆலோசிக்கப்படுகின்றன.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago