டெல்லியில் 1947-ல் மத்திய அரசு தொடங்கிய பி.எட். கல்வி நிறுவனத்தில் தமிழ்ப் பிரிவு மூடல்

By ஆர்.ஷபிமுன்னா

இந்தியாவின் முதல் மத்திய கல்வித்துறை அமைச்சரான மவுலானா அபுல் கலாம் ஆசாத்தால் டெல்லியில் மத்திய அரசின் ஆசிரியர் கல்வியியல் நிறுவனம் 1947-ல் அமைக்கப்பட்டது. ஆங்கிலம், உருது, இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிப் பிரிவுகளைத் தொடங்கிய பிறகு தமிழ், பஞ் சாபி, பெங்காலி ஆகியவை சேர்க்கப்பட்டன. இத்துடன் மற்ற பாடப்பிரிவுகளுக்கும் கல்வியியல் பயிற்றுவிக்கப்படுகிறது.

இது, டெல்லியின் சத்ரா மார்கிலுள்ள மிராண்டா கல்லூரிக்கு அருகில் செயல்பட்டு வருகிறது. பட்டதாரி மாணவர்களுக்கு ஒரு வருடமாக இருந்த கல்வி பிறகு இரண்டு வருடங்களுக்கு மாற்றப்பட்டது. தமிழுக்கு 7 மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் பொது நுழைவுத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான நுழைவுத்தேர்வில் மாணவர்கள் தகுதி பெறுவதில்லை என தமிழ் மொழிக்கான கல்வியியல் பிரிவு கடந்த 2016-ம் ஆண்டு முதல் மூடப்பட்டு விட்டது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் அக்கல்வியியல் நிறுவன வட்டாரம் கூறும்போது, ‘‘சுமார்15 வருடங்களுக்கு முன்பும் இதேகாரணம் காட்டி 2 வருடம் தமிழும், பெங்காலியும் மூடப்பட்டன. அப்போது டெல்லி பல்கலை.யின் தமிழ்ப் பேராசிரியர் மாரியப்பன், பெங்காலியின் நந்திதா பாசுவின் முயற்சியால் மீண்டும் தொடங்கப்பட்டது. தற்போதைய முடிவு மத்திய அரசின் உத்தரவின்றி அதன் பேராசிரியர்களால் மூடப்பட்டுள்ளது.

டெல்லியில் வருடந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழில் பட்டம் பெறுகின்றனர். இவர்கள் அன்றி, நாடு முழுவதிலும் இருந்தும் தமிழ் மாணவர் எழுதும் நுழைவுத்தேர்வில் எவரும் தகுதி பெறுவதில்லை எனக் கூறப்படுவதில் உண்மை இல்லை’’ எனத் தெரிவித்தனர்.

டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் இந்த மத்திய அரசின் நிறுவனம் கல்வியியலில் உயர்கல்வி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இதுபோல், உயர்கல்வி நிறுவனத்தில் தமிழுக்கானப் பாடப்பிரிவு போதிக்கப்படுவது பெருமையான விஷயமாகக் கருதப்படுகிறது.

 இதில் தமிழுக்கான ஒதுக்கீட்டு இடங்கள் அதிகரிக்கப்படாததுடன், மற்ற பாடப்பிரிவுகளுக்கானதை போல் முதுநிலை கல்வியியலும்(எம்எட்) துவக்கப்படவில்லை எனப் புகார் உள்ளது. இது மூடப்பட்டு விட்டதால் கடந்த இரண்டு வருடங்களாக டெல்லியின் வாழும் தமிழர்கள் கல்வியியல் பயில பல லட்சங்கள் செலவு செய்து தமிழகத்தின் தனியார் நிறுவனங்களுக்கு செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

இந்தியா

17 mins ago

இந்தியா

48 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்