ஏழுமலையான் கோயிலில் ஜன.15-ல் சுப்ரபாத சேவை

By என்.மகேஷ் குமார்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் ஜனவரி 15-ம் தேதி முதலாக மீண்டும் சுப்ரபாத சேவை நடைபெறும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் அதிகாலை 2.30 மணிக்கு சுப்ரபாத சேவை நடைபெறுவது ஐதீகம். அதன் பின்னரே சுவாமியின் சன்னதியில் அர்ச்சனை, தோமாலை சேவை போன்றவை நடத்தப்படும்.

ஆனால், மார்கழி மாதத்தில் மட்டும் சுப்ரபாத சேவைக்கு பதிலாக ஆண்டாள் அருளிய திருப்பாவை சேவை பாடப்படும். மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை சேவை நடந்த பின்னர், மீண்டும், தை மாதம் முதல் நாள் முதல் சுப்ரபாத சேவை தொடங்கி விடும்.

இந்த ஐதீக முறை இந்த ஆண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, வரும் 14ம் தேதி வரை திருப்பாவை சேவை நடத்தப்பட்டு, மறுநாள் 15ம் தேதி முதல் வழக்கம்போல், சுப்ரபாத சேவை தொடர உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்