பாஜக, காங்கிரஸ் இல்லாத 3-வது கூட்டணி அமைக்க தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் முயற்சி செய்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, அவரது மகனும், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவருமான கே.டி.ராமாராவ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால், காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணியை அமைக்க தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதேசமயத்தில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸுடன் இணைந்து மாநில கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சித்து வருகிறார்.
இந்நிலையில், ஆந்திராவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து சந்திரபாபு நாயுடுவை எதிர்க்க சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளார். மேலும், எதிர்வரும் மக்களவைத் தேர்தலி லும் அக்கட்சியுடன் இணைந்து மூன்றாவது கூட்டணி அமைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
இதனை உறுதிப்படுத்தும் வகை யில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை ஹைதராபாத்தில் சந்திரசேகர ராவின் மகனும், தெலங் கானா ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவருமான கே.டி.ராமா ராவ் சந்தித்து பேசியுள்ளார். இதில் அவர்களுக்கு இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
எனவே, தேசிய அரசியலிலும், ஆந்திர அரசியலிலும் விரைவில் சில மாற்றங்கள் நிகழலாம் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 mins ago
இந்தியா
47 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago