ராமர் கோயில் கட்டுவதாக பிரதமர் நரேந்திர மோடி தங்களை ஏமாற்றிவிட்டதாக அயோத்தி சாதுக்கள் கூறியுள்ளனர். ராமர் கோயில் வழக்கின் தீர்ப்பு வெளியான பின் கோயில் கட்டுவதில் சட்டத்திற்கான முடிவு எடுக்க முடியும் என தன் பேட்டியில் பிரதமர் மோடி பதிலளித்திருந்தார்.
இது குறித்து அயோத்தியின் சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள ராமர் கோயிலில் அர்ச்சகரான மஹந்த் சத்யேந்திரதாஸ் கூறும்போது, ''ராமர் கோயில் கட்டுவதன் மீதான பிரதமர் மோடியின் பதிலால் அயோத்தியின் சாதுக்களும், நாட்டின் பொதுமக்களும் பலத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். அயோத்தியில் நிரந்தரமாக ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என விரும்பும் அனைவரையும் மோடி ஏமாற்றி விட்டார்'' எனத் தெரிவித்தார்.
2014-ல் பொதுமக்கள் ராமர் கோயில் கட்டுவதற்காக மோடிக்கு வாக்களித்ததாகவும், ஆனால், அரசியல் ஆதாயத்திற்காக அந்த முயற்சி இழுக்கப்படிக்கப்படுவதாகவும் மஹந்த் சத்யேந்தர்தாஸ் புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அயோத்தியின் மணிராம் சாவ்னி கோயிலின் உதவி அர்ச்சகரான மஹந்த் கமல்நாயண் கூறும்போது, ''கோயில் கட்டுவதற்கு ஒரு பெரிய காரணத்தை பிரதமர் மோடி கூறுகிறார். மத்தியில் அவர் பிரதமராகவும், உ.பி.யில் அவரது கட்சியும் ஆட்சியில் இருந்து பலன் ஏதும் இல்லை'' எனத் தெரிவித்தார்.
இதற்கு முன் சமீபத்தில் அயோத்தி சாதுக்களை சந்தித்த பாஜக தலைவர் அமித் ஷாவும், ராமர் கோயில் கட்ட அவசரச் சட்டம் இயற்றுவதில் சில சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago