நொய்டா கொலைக் குற்றவாளி கோலியை தூக்கிலிட தயாராகிறது மீரட் சிறை

By ஆர்.ஷபிமுன்னா

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் நடந்த தொடர் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி சுரேந்தர் கோலியை (42) தூக்கிலிட மீரட் மாவட்ட சிறை தயாராகி வருகிறது. இங்கு கடைசியாக 39 வருடங்களுக்கு முன்பு ஒருவர் தூக்கிலிடப்பட்டார்.

டெல்லியை அடுத்துள்ள நொய்டாவிலுள்ள நிதாரி கிரா மத்தில் உள்ள பங்களாவில் பணி யாற்றியவர் சதீஷ் என்ற சுரேந்தர கோலி. தனது எஜமானாரான மொனிந்தர் சிங் பாந்தருக்கு தெரியாமல், இளம்பெண்கள் மற்றும் குழந்தைகளை கொலை செய்ததாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் 2006-ல் கோலி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த காஜியாபாத் சிபிஐ நீதிமன்றம், கோலிக்கு தூக்கு தண்டனை விதித்தது.

இந்நிலையில், கோலியின் கருணை மனுவை தள்ளுபடி செய்யும்படி, மத்திய உள்துறை அமைச்சகம் செய்த பரிந்தரையை கடந்த ஜூலை 27-ல் குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து, கோலியை தூக்கிலிடுவதற்கான வாரண்ட்டை உபியின் மீரட் மாவட்ட சிறைக்கு காஜியாபாத் நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை பிறப்பித்தது.

இதையடுத்து, மீரட்டில் உள்ள சவுத்ரி சரண் சிங் மாவட்ட சிறைச்சாலையில் கோஹிலியை தூக்கிலிட முடிவு செய்யப்பட்டுள்ளது. தூக்கிலிடும் பணியை ஏற்றுள்ள பவண், மீரட் சிறைக்கு வந்து அதற்கான முன் ஏற்பாடுகளை தொடங்கினார்.

12-ம் தேதி தூக்கு

‘தி இந்து’விடம் மீரட் சிறை அதி காரிகள் வட்டாரம் கூறும்போது, “1975 வரை இங்கு 17 பேர் தூக்கிலிடப்பட்டனர். அதன் பிறகு யாரும் தூக்கிலிடப்படாததால் தூக்குமேடை சரி பார்க்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி கோலி வரும் 12-ம் தேதி தூக்கிலிடப்படுவார்” என்றனர்.

முதல்முறையாக தூக்குத் தண்டனையை நிறைவேற்ற உள்ள பவணின் தந்தை மாமு அவருக்கு முன்பாக மீரட் சிறையில் தூக்கிலிடும் பணியில் இருந்தார். மாமு இதுவரை, 12 பேருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றி உள்ளார். இதில், பிரபல குற்றவாளிகளான பில்லா, ரங்கா மற்றும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கொலையாளிகளும் அடக்கம்.

நிதாரி வழக்கின் பின்னணி

நிதாரியில் இளம்பெண்கள் மற்றும் குழந்தைகள் திடீர், திடீரென காணாமல் போயினர். இதுவிஷயத்தில் உபி போலீசார் அலட்சியமாக இருந்ததால் காணாமல் போவோர் எண்ணிக்கை கூடிக் கொண்டிருந்தது. 26 வயது இளம்பெண் பாயலும் காணாமல் போக, அவரது தந்தை ரோஷன்லால் உபி உயர் நீதிமன்றம் வரை சென்று, கடந்த 2006-ம் ஆண்டு நவம்பர் 29-ல் போலீசாரைத் தட்டி எழுப்பினார்.

காணாமல் போன பாயலின் செல்போன் எண்ணை போலீசார் கண்காணித்து வந்தனர். சுமார் ஒன்றை வருடங்களுக்குப் பின் திடீரென அந்த செல்போன் எண் மீண்டும் இயங்கத் தொடங்கியது. அதைப் பயன்படுத்திய சுரேந்தர் கோலியை விசாரித்தபோது, இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

ஒரு வருடத்துக்கு முன்பே பாயலை கொன்று அந்த பங்களாவில் புதைத்து விட்டதாக போலீசாரிடம் கோலி ஒப்புக் கொண்டான். அவர்களிடம், “அங்கு தோண்டினால் பாயலின் செருப்பு வேண்டுமானால் கிடைக்கலாம்” எனவும் அலட்சியமாகக் கூறியுள்ளான். சரி அதையாவது கைப்பற்றி வழக்கை முடிப்போம் என மறுநாள் பங்களாவின் பின்புறம் உள்ள சாக்கடைக் கால்வாயில் தோண்டிய போலீசாருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி.

அங்கு குவியல், குவியலாக மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகள் கிடைத்தன. அவற்றைப் புல்டோசர் உதவியால் தோண்டி எடுத்த பிறகு பங்களா காம்பவுண்ட் சுவருக்குப் பின் னால் உள்ள காலி நிலத்தில் இருந்த சாக்கடை கால்வாயில் கொலை செய்யப்பட்டவர்களின் துணிமணி கள், செருப்புகள் மற்றும் குழந்தை களின் ஸ்கூல் பேக்குகள், வளை யல், காதணிகள் ஆகியவற்றை சிறு பாலிதீன் பைகளில் நிரப்பி போடப்பட்டிருந்ததும் கண்டுபிடிக் கப்பட்டது.

இதற்குக் காரணம் என கோலியின் முதலாளியான 52 வயது மொனிந்தர் சிங் பாந்தரும் கைது செய்யப்பட்டார். இருவரும் சேர்ந்து 17 இளம்பெண் மற்றும் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து வெட்டிக் கொன்று சாக்கடையில் வீசியதாக 16 வழக்குகள் பதிவானது. பிறகு இதில், பாந்தருக்கு நேரடி தொடர்பு இல்லை என விடுவிக்கப்பட்டார். அவர் மீதான வேறு சில வழக்குகளில் ஜாமீன் பெற்றுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்