ராகுலுக்கு சவாலாகும் அமேதி தொகுதி; மாறி போட்டியிட ஆலோசனை? - ‘இந்து தமிழ் பிரத்யேகச் செய்தி’

By ஆர்.ஷபிமுன்னா

வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அமேதி பெரும் சவாலாகி வருகிறது. இதனால், தொகுதி மாறி போட்டியிடும்படி உபி காங்கிரஸார் அவருக்கு யோசனை தெரிவித்துள்ளனர்.

 

கடந்த முப்பது வருடங்களாக அமேதி காந்தி குடும்பத்தின் ஆஸ்தான தொகுதியாக இருந்து வருகிறது. இடையில் 1998 மக்களவை தேர்தலில் மட்டும் காங்கிரஸின் வேட்பாளரான கேப்டன் சதீஷ் சர்மா, பாஜகவின் சஞ்சய்சிங்கிடம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தார்.

 

1999-க்கு பின் சோனியா காந்தி போட்டியிடத் துவங்கிய பின் மீண்டும் அமேதியில் காங்கிரஸ் வலுப்பெற்றது. 2004 மக்களவை தேர்தலில் திடீர் என அரசியலில் குதித்த ராகுல், அமேதியில் போட்டியிட்டார்.

 

இவரது தாய் சோனியா அருகிலுள்ள ராய்பரேலிக்கு மாற வேண்டி வந்தது. அமேதியில் ராகுலுக்கு 71 சதவிகித வாக்குகள் கிடைத்தன. ஆனால், அடுத்து வந்த தேர்தல்களில் இந்த சதவிகிதம் குறைந்து 2009-ல் 66, 2014-ல் 46 என்றானது.

 

அதேசமயம், பாஜகவிற்கு ஓரிலக்கத்தில் இருந்த வாக்கு சதவிகிதம் 2014-ல் 37 என்றானது. இந்தமுறை ராகுலை எதிர்த்து பாஜகவில் ஸ்மிருதி இராணி போட்டியிட்டிருந்தார். இதன் பிறகு பாஜகவின் கவனம் அமேதியில் அதிகரித்தது.

 

இதன் பலனாக கடந்த 2017-ல் நடைபெற்ற உபி சட்டப்பேரவை தேர்தலில் அமேதியின் ஐந்து தொகுதிகளில் பாஜகவிற்கு 4 கிடைத்தன. மீதியுள்ள ஒரு தொகுதியும் சமாஜ்வாதிக்கு சென்றதே தவிர அதை காங்கிரஸால் தக்க வைக்க்க முடியவில்லை.

 

இந்நிலையில், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், அவரது தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள் அமேதிக்கு பலமுறை வந்து கூட்டம் நடத்தினர். கடந்த வாரம் அமேதிக்கு வந்த மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதியும் ரூ.77 கோடிக்கான வளர்ச்சித் திட்டங்களை சமீபத்தில் துவக்கி வைத்தார்.

 

இதனால், மீண்டும் போட்டியிடும் ஸ்மிருதிக்கு அமேதியில் ஆதரவு பெருகி வருவதாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாக, ராகுல் வரும் தேர்தலில் தொகுதி மாறுவது நல்லது என உபி காங்கிரஸார் அவருக்கு யோசனை கூறி உள்ளனர்.

 

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் உபி காங்கிரஸார் கூறும்போது, ‘தேசிய அளவில் பொதுமக்கள் பாஜக மீது அதிருப்தியாக இருப்பினும் அக்கட்சியின் நிலை அமேதியில் எதிர்மறையாக உள்ளது. மத்தியில் எங்கள் ஆட்சி பத்து வருடம் இருந்தும் இங்கு எந்த பணிகளும் நடக்கவில்லை.

 

இதுபோன்ற காரணங்களால், ராகுல் தொகுதி மாறுவது நல்லது இல்லையெனில், அவர் அமேதிவாசிகளின் குறைகளை தீர்க்க வேண்டும் என யோசனை கூறி உள்ளோம்.’ எனத் தெரிவித்தனர்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்