பொங்கல் பண்டிகையையொட்டி ஆந்திராவில் 4 நாட்கள் களைகட்டும் சேவல் பந்தயம்

By என்.மகேஷ் குமார்

பொங்கல் பண்டிகையையொட்டி, ஆந்திராவில் 4 நாட்களுக்கு முன்னதாகவே சேவல் பந்தயம் தொடங்கியுள்ளது. இதில் லட்சக்கணக்கில் பந்தய பணம் கைமாறி வருகிறது.

ஆந்திராவில் ’சங்கராந்தி’ பெய ரில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை நாளில், கடலோர மாவட் டங்களான பிரகாசம், கிழக்கு, மேற்கு கோதாவரி, விசாகப்பட் டினம் ஆகிய பகுதிகளில் சேவல் பந்தயங்கள் நடைபெறும்.

இந்த பந்தயங்களுக்காக ஓராண்டாக சேவல்களை வளர்த்து வருவார்கள். இவைகளுக்கு முந்திரி, பாதாம், பிஸ்தா போன்றவைகளை கொடுத்து பந்தயத்திற்கென தயார்படுத்து வார்கள். இந்த சேவல்கள் ரூ. 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகின்றன. சேவல் பந்தயங்களுக்காக பல கிராமங்களில் இப்போதிலிருந்தே தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் முகாமிட்டு, சேவல் பந்தய முகாம்களை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிழக்கு கோதாவரி மாவட்டம், பெத்தாபுரம் பகுதிகளில் நேற்றே சேவல் பந்தயம் தொடங்கி விட்டது. இதில் ஆயிரக்கணக்கில் பந்தயம் கட்டி பலர் பங்கேற்றனர். போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என இந்த 4 நாட்களும் சேவல் பந்தயம் களை கட்டும். இதில் கோடிக்கணக்கில் பந்தய பணம் கைமாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்