தங்கைக்கு நேர்ந்த கதி; 5 ஆண்டுகளாக கர்ப்பிணிகளுக்கு இலவச ஆட்டோ சேவை: கர்நாடக ஓட்டுநர் நெகிழ்ச்சி

By ஏஎன்ஐ

கர்ப்பிணிகளை மட்டும் எந்த நேரமும் மருத்துவமனைக்கு இலவசமாக அழைத்துச் செல்லும் சேவையைக் கடந்த 5 ஆண்டுகளாகக் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் செய்து வருகிறார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கலாபுர்கி நகரில் உள்ள சாந்தி நகரைச் சேர்ந்த மல்லிகார்ஜுன் என்ற ஆட்டோ ஓட்டுநரே இந்த சேவையைச் செய்து வருகிறார். இவரிடம் தற்போது 4 ஆட்டோக்கள் உள்ளன. இந்த 4 ஆட்டோக்களிலும் தெளிவாக, கர்ப்பிணிகள் மட்டும் எந்த நேரமும், எந்த நாளும் மருத்துவமனைக்குச் செல்ல என் ஆட்டோவை அழைக்கலாம். இலவச சேவையாக அழைத்துச் செல்லப்படும் என்று எழுதி, ஆட்டோவின் பின்புறம் செல்போன் எண்களைக் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சேவையை மல்லிகார்ஜுன் கடந்த 5 ஆண்டுகளாகச் செய்து வருகிறார்.

இந்தச்சேவை குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு ஆட்டோ ஓட்டுநர் மல்லிகார்ஜுன் கூறியதாவது:

''என்னுடைய ஒரே சகோதரி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் கர்ப்பமாக இருந்தபோது, பிரசவ வலியால் அவதிப்பட்டார். அப்போது அவரை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் தேடியபோது எந்த விதமான ஆம்புலன்ஸும் வரவில்லை.

வாகனங்களும் இல்லை. பின் பல்வேறு சிரமங்களுக்குப் பின் என் சகோதரியை மருத்துவமனையில் சேர்த்தோம். இதை நிலை மற்ற பெண்களுக்கும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே நான் இந்த இலவச ஆட்டோ சேவையை கடந்த 5 ஆண்டுகளாகச் செய்கிறேன்.

என்னிடம் உள்ள 4 ஆட்டோக்களிலும் கர்ப்பிணிகள் பயணித்தால் அவர்களிடம் பணம் வாங்குவதில்லை. கர்ப்பிணிகள் வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும், மீண்டும் அவர்களின் வீட்டுக்குச் செல்லவும் நான் ஆட்டோவை இலவசமாக வழங்குகிறேன். இதற்காக என் அனைத்து ஆட்டோக்கள் பின்புறமும் செல்போன் எண்ணை எழுதி இருக்கிறேன்.

எப்போது வேண்டுமானாலும் உதவிக்கு என்னைக் கர்ப்பிணிகள் மட்டும் அழைக்கலாம். இதுவரை 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களை இலவசமாக அழைத்துச் சென்று வந்துள்ளேன்''.

இவ்வாறு மல்லிகார்ஜுன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

இந்தியா

16 mins ago

இந்தியா

20 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்