டெல்லி திகார் சிறையில் தொடரும் கைதிகளின் மர்ம இறப்பு

By ஐஏஎன்எஸ்

டெல்லி திகார் சிறையில் கைதி ஒருவர் மர்மமான முறையில் இறந்த கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மூன்று வாரங்களில் திகார் சிறையில், 4-வது முறையாக மர்மமான முறையில் கைதி இறந்த சம்பவம நடந்துள்ளது.

டெல்லியில் உள்ள திகார் சிறையில் வியாழக்கிழமை மாலை சிறை.1-ல் அடைக்கப்பட்டிருந்த ரிங்கு ஜூன்ஜா(27) என்ற கைதி மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

ரிங்கு ஜூன்ஜா கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், இந்த நிலையில் அவரது இறப்பு மர்மமாக உள்ளதாகவும், உள்ளிருந்தவர்களே ரிங்குவை கொலை செய்திருக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். ரிங்குவின் மர்ம இறப்பு குறித்து விசாரித்து வருவதாக காவல்த் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

கடந்த சில வாரங்களில் நடந்துள்ள மர்மமான இறப்புகளை அடுத்து திகார் சிறையில் பதற்றம் நிலவுகிறது. இதனை அடுத்து இது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த சிறைத்துறை டி.ஜி.பி. முகேஷ் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்