சுதந்திரபோர் வீரர்களை நினைவுபடுத்தும் மூன்று அருங்காட்சியகங்கள்: டெல்லியில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்

By ஆர்.ஷபிமுன்னா

 

குடியரசு தினத்தன்று சுதந்திரப் போர்வீரர்களை நினைவுபடுத்தும் மூன்று அருங்காட்சியகங்களை இன்று பிரதமர் நரேதிர மோடி திறந்து வைத்தார். இவை, டெல்லியின் செங்கோட்டையில் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

 

இந்த மூன்று அருங்காட்சியகங்களின் இந்திய தொல்லியல் ஆய்வகத்தினரால் மிகக் குறுகிய காலகட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இன்று சுபாஷ் சந்திரபோஸின் 122 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு திறக்கப்பட்டுள்ளது.

 

அருங்காட்சியகத்நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வீரத்தை நினைவூட்டும், ’ஐஎன்ஏ’, 1857 சுதந்திரப்போராட்டக் கலகத்தினருக்காக, ‘ஆஜாதி கே திவானே’, பஞ்சாபின் ஜாலியன்வாலா பாக் படுகொலையை நினைவூட்டும், ‘யாதே ஜாலியான்’ என அந்த மூன்றுக்கும் பெயரிடப்பட்டுள்ளது.

 

வரலாற்று மாணவர்களுடன் பொதுமக்களும் அறியும் வகையில் பல அரிய தகவல்கள் இந்த அருங்காட்சியகங்களில் தொகுக்கப்பட்டுள்ளன. சுதந்திரப்போராட்டக் காலங்களில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸால் எழுதப்பட்டு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள கடிதங்களின் அடிப்படையில் நிகழ்ச்சிகளையும் படமாக வடிவமைக்கப்பட்டு ஐஎன்ஏவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

 

ஆஜாதி கே திவானேயில் 1857 கலகத்தின் காட்சிகளை உண்மையாக தீட்டப்பட்ட 70 ஓவியங்களின் மறுவடிவங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சிலிடம் உள்ள சுதந்திரப்போராட்ட தியாகிகளின் பெயர்களை இந்த அருங்காட்சியகத்தில் எழுதியும் வைக்கப்பட்டுள்ளன.

 

மூன்றாவது அருங்காட்சியகம் கடந்த ஏப்ரல் 13, 1919-ல் பஞ்சாபில் நடந்த படுகொலையை பற்றியது. இதைக் காணும் இளைஞர்களின் தேசப்பற்றின் முக்கியத்துவத்தை அறியும் வகையில் அமைந்துள்ளது. இதில், வீரமரணம் அடைந்தவர்களின் பெயர்கள் பல்வேறு வகையில் சேகரித்து தொகுத்து வைக்கப்பட்டுள்ளது.

 

டெல்லியின் செங்கோட்டையில் இந்த மூன்று அருங்காட்சியகங்களையும் பிரதமர் மோடி இன்று காலை 9.30 மணிக்கு திறந்து வைத்தார். நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளவற்றை டெல்லிவரும் பொதுமக்கள் பார்வையிடலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்