சச்சார் கமிட்டி பரிந்துரைத்த பின் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்காமல் மத்திய அரசு மறுத்து வருவதாக திமுக அவைத்தலைவர் கனிமொழி புகார் கூறியுள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு மசோதாவில் அவர் மாநிலங்களவையில் பேசும் போது இதை குறிப்பிட்டார்.
இது குறித்து நேற்று மாநிலங்களவையில் கனிமொழி பேசியதாவது: சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முஸ்லிம்கள் நம் நாட்டில் பின்தங்கியிருப்பதாக நீதிபதி சச்சார் தன் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
அவரது கமிட்டியின் பரிந்துரைக்கு பின்பும் முஸ்லிம்களுக்கு மத்திய அரசு இடஒதுக்கீடு செய்யாமல் இருக்கிறது. இதை விடுத்து தற்போதைய மத்திய அரசிற்கு முஸ்லிம்கள் சகோதரிகள் மீது மட்டும் திடீர் என அதீத அக்கறையும், பாசமும் பிறந்துள்ளது.
இது உண்மை எனில் இந்த அரசு முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக இடஒதுக்கீடு அளித்திருக்கலாம். தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்த போது முஸ்லிம்களுக்காக 3.5 சதவிகிதம் இடஒதுக்கீடு கொண்டு வந்தது.
இதையே மத்திய அரசும் செய்யலாம். முஸ்லிம் பெண்களை முன்னேற்றுவதாக நீங்கள் கூறவேண்டும் எனில், இடஒதுக்கீடு அளித்து அவர்களை முன்னேற்ற வேண்டும்.’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago