உ.பி.யில் காங்கிரஸை ஒதுக்கி விட்டு மாயாவதியும், அகிலேஷும் மக்களவை தேர்தலுக்காக கூட்டணி அமைத்துள்ளனர். இவர்களுடன் கூட்டணி அமைக்க இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதகாக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சூசகமாக அறிவித்துள்ளார்.
தம் இளைய சகோதரி பிரியங்கா வத்ராவின் அரசியல் நுழைவு குறித்து ராகுல் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மாயாவதி-அகிலேஷ் கூட்டணியை சமாளிக்க பிரியங்கா நுழைக்கப்படுவதாக கேள்வி எழுந்தது.
இதற்காக ராகுல் அளித்த பதிலில் கூறும்போது, ‘மாயாவதியும், அகிலேஷும் தம் கூட்டணி அமைத்தனர். இதில் மூவரின் நோக்கமும் பாஜகவை தோற்கடிப்பதே. இந்த இருவருடனும் எங்களுக்கு எந்த விரோதம் இல்லை அன்பு உள்ளது. எனவே, அவர்கள் தொடர்ந்து எங்களுடன் பேச விரும்பினால் எந்த ஆட்சேபனையும் இல்லை.’ எனத் தெரிவித்தார்.
உபியில் பகுஜன் சமாஜ் தலைவி மாயாவதி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் ஆகியோர் தம்முடன் அஜீத்சிங்கின் ராஷ்டிரிய லோக் தளம் கட்சியை இணைத்துள்ளனர். இவர்களுடன் வரும் நாட்களில் கூட்டணி சேர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கும் ராகுல் பதிலளித்தார்.
இதில் அவர் கூறும்போது, ‘மாயாவதிஜி, அகிலேஷ்ஜி மீது நான் அதிக மதிப்பு வைத்துள்ளேன். நம் அனைவரின் கொள்கைகளில் அதிக ஒற்றுமை உள்ளது. இந்த இருவருக்கும் பாஜகவை தோல்வியுறச் செய்ய எங்கள் உதவி தேவைப்படும் போதெல்லாம் ஒத்துழைப்பளிக்க தயாராக உள்ளோம்.’ எனத் தெரிவித்தார்.
இது குறித்து ராகுல் மேலும் கூறுகையில், ‘பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் இணைந்து பாஜகவை தோற்கடிக்கச் செய்யும் இடங்களில் எல்லாம் நாம் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம். பிரியங்காவின் வருகை
சில பாஜகவினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.’ எனத் தெரிவித்தார்.
பிரியங்காவின் அரசியல் நுழைவால் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தனி இடம் கிடைக்கும் எனவும் குறிப்பிட்ட ராகுல், உபியில் மாயாவதி-அகிலேஷ் கூட்டணியில் சேர விரும்புவதை காட்டுவதாகக் கருதப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago