சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து அலோக் வர்மா நீக்கம்: பிரதமர் மோடி தலைமைக் கூட்டத்தில் அதிரடி முடிவு

By சந்தீப் புகான்

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் ஜனவரி 10ம் தேதியான இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான உயர்மட்டக் குழு சுமார் 2 மணி நேரம் கூட்டம் நடத்திய பிறகு அலோக் வர்மா நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தனது பிரதிநிதியாக நியமித்த நீதிபதி ஏ.கே. சிக்ரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

மத்திய அரசினால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட அலோக் வர்மாவை உச்ச நீதிமன்றம் மீண்டும் சிபிஐ இயக்குநராக மீண்டும் நியமித்தது.  மேலும் தேர்வுக்குழு அலோக் வர்மா குறித்த முடிவை எடுத்துக் கொள்ளட்டும் என்று உச்ச நீதிமன்றம் அரசு தரப்புக்கு முடிவை விட்டுவிட்டது.  இவரது பதவிக்காலம் ஜனவரி 31ம் தேதி முடிவுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் அலோக் வர்மா நீக்கப்பட்டுள்ளார். அதாவது இந்த முடிவு 2:1 பெரும்பான்மை முடிவின் படி எட்டப்பட்டுள்ளது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மட்டும் அலோக் வர்மாவை நீக்கும் முடிவை ஏற்கவில்லை என்றும் அவர் இந்த முடிவை ஒத்திப் போட வேண்டும் என்று தெரிவித்ததாக  சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

பிரதமர் நரேந்திர மோடியும் நீதிபதி ஏ.கே.சிக்ரி ஆகியோர் அலோக் வர்மாவுக்கு எதிராக மத்திய கண்காணிப்பு ஆணையம் தயாரித்த அறிக்கையில் தகுதி இருப்பதாகக் கருதினர்.

 

இதே சிவிசி அறிக்கையின் அடிப்படையில்தான்  அலோக் வர்மாவை மோடி அரசு கட்டாய விடுப்பில் அனுப்பிவைத்தது.

 

பிடிஐ தகவல்கள்:

 

அலோக் வர்மா தான் இல்லாத போது இடைக்கால இயக்குநராக இருந்த நாகேஸ்வர ராவின் பெரும்பாலான பணியிட மாற்ற உத்தரவுகளை ரத்து செய்தார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் அறிக்கையை இந்தக் கூட்டத்துக்கு முன்பாகக் கேட்டுள்ளார்.

 

மேலும் மல்லிகார்ஜுன கார்கே, அலோக் வர்மா தன் தரப்பு நியாயத்தைப் பேச கமிட்டி வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தான் கருதியதாகத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

மேலும்