மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பள்ளியில் நடந்த குடியரசு தின விழா கலை நிகழ்ச்சியில் தேசபக்திப் பாடலுக்கு நடனமாடிய குழந்தைகள் மீது பணத்தாள்களை போட்ட போலீஸ் கான்ஸ்டபிள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்
நாக்பூரில் பிவாபூர் எனுமிடத்தில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளியில் குடியரசு தினத்தை ஒட்டி கலை நிகழ்ச்சி நடந்தது. அதில் பள்ளிச் சிறுவர்கள் தேசபக்தி பாடலுக்கு நடனமாடியுள்ளனர். அப்போது பிரமோத் வால்கே என்ற போலீஸ் கான்ஸ்டபிள் நடனமாடிய மாணவர்கள் மீது ரூபாய் நோட்டுகளை வீசியுள்ளார்.
முன்னதாக, வால்கே தனது நண்பர்கள் அஜய் சவுத்ரி, சுனில் பன்சோட் ஆகியோருடன் இணைந்து மது அருந்தியுள்ளார். பின்னர் அவர் மட்டும் அருகிலிருந்த பள்ளிக்குச் சென்றிருக்கிறார். அங்கு மாணவர்கள் நடனமாடிக் கொண்டிருக்க, மேடையில் ஏறி மாணவர்கள் மீது பணத்தை வீசியுள்ளார்.
இதனை அங்கிருந்த சிலர் வீடியோவில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட அந்தக் காட்சி வைரலானது. இதனையடுத்து போலீஸ் எஸ்.பி. ராகேஷ் ஓலா சம்பந்தப்பட்ட பிரமோத் வால்கேவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். பணியின்போது மது அருந்திய வால்கேவின் மற்ற இரு போலீஸ் நண்பர்களும் வேறு இடத்துக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago