வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் மாநில அளவில் மட்டும் அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி(சிபிஎம்) முடிவு செய்துள்ளது. இதனால், காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணியில் அக்கட்சியும் சேர்வது சந்தேகமாகி விட்டது.
பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து ஒன்றுகூடத் தொடங்கிய எதிர்க்கட்சிகளில் காங்கிரஸ் தேசிய அளவில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக முன்னிறுத்தப்படும் முயற்சியால் பல்வேறு கட்சிகள் விலகத் தொடங்கி உள்ளன.
இதில் முதல் தலைவராக உ.பி.யில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும், சமாஜ்வாதியின் அகிலேஷ் சிங் யாதவும் அளித்த கூட்டணி அறிவிப்பில் காங்கிரஸுக்கு இடமளிக்கவில்லை. இதனிடையில், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் தலைவர் கே.சந்திரசேகர் ராவ், பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை அமைக்க முயற்சிக்கிறார்.
இவருக்கு ஆதரவளிக்கும் விதமாக ஒடிசாவின் முதல்வரும் பிஜு ஜனதா தளம் தலைவருமான நவீன் பட்நாயக் இரண்டு கட்சிகளுடனும் சேரப்போவதில்லை என ஜனவரி 9-ல் அறிவித்திருந்தார். இவர்கள் பட்டியலில் இடதுசாரிகளும் சேர்ந்து விடும் வாய்ப்புகள் உருவாகி உள்ளன.
இதன் மீதான கருத்தை கொல்கத்தாவில் தன் சக கட்சித் தலைவர்களிடம் தேசிய பொதுச்செயலளார் சீதாராம் யெச்சூரி பகிர்ந்துள்ளார். சமீபத்தில் இறந்த தம் கட்சி தலைவர்களில் ஒருவரான நிருபம் சென்னின் அஞ்சலிக் கூட்டத்தில் கலந்துகொள்ள யெச்சூரி வந்திருந்தார். அப்போது அவர் கூறிய கருத்தை அக்கட்சியின் நிர்வாகிகள் ‘இந்து தமிழ் திசை’யிடம் பகிர்ந்து கொண்டனர்.
அதில் யெச்சூரியின் கருத்தாக நிர்வாகிகள் கூறும்போது, ''தேசிய அளவில் காங்கிரஸுடன் கூட்டணி வைக்கும் வாய்ப்பு இல்லை. பல்வேறு மாநிலங்களில் பல கட்சிகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. எனவே, காங்கிரஸுடன் கூட்டணிக்கு மாநில அளவில் தான் பேச வேண்டி இருக்கும். தேர்தலுக்குப் பின் பாஜகவிற்கு எதிரான மதச்சார்பற்ற கூட்டணி ஆட்சியை அமைக்க முயல்வோம்'' எனத் தெரிவித்தார்.
எச்.டி.தேவகவுடா, அட்டல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் மன்மோகன்சிங் (முதல் முறை) ஆகியோர் தேர்தலுக்குப் பிறகு அமைந்த கூட்டணியில் பிரதமரானவர்கள். அதுபோல், வரும் தேர்தலுக்குப் பிறகே எதிர்க்கட்சிகள் கூட்டணி அமையும் வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. இது, பாஜக கூட்டணி ஆட்சி அமைய மறுவாய்ப்பு கிடைக்காமல் இருந்தால் தான் சாத்தியம் அவசியம்.
பிப்ரவரி 3-ம் தேதி சிபிஎம் கொல்கத்தாவில் எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்துகொள்ளும் ஒரு கூட்டம் நடத்துகிறது. இக்கூட்டத்திகு பின் கூட்டணி குறித்த தனது இறுதி முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், காங்கிரஸுடன் நட்புரீதியான கூட்டணிப் பேச்சுவார்த்தையும் சிபிஎம் தலைவர்கள் தொடர்ந்து வருகின்றனர்.
இதில் தங்களுக்கு சாதகமான தொகுதிப் பங்கீடு தேசிய அளவில் கிடைத்தால் அதற்கு ஒப்புக்கொள்ளவும் சிபிஎம் திட்டமிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago