ராஜஸ்தானில் ஒரு அரசு மருத்துவமனையில் அரைகுறை பிரசவம் பார்த்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இங்குள்ள செவிலியர் ஒருவர் இப்பணியில் ஈடுபட்டபோது பிரசவம் கடினமாக இருந்த காரணத்தால் குழந்தையை இழுக்கும்போது பாதி உடல் மட்டும் வந்த பகீர் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த எதிர்பாராத சம்பவத்திற்கு பிறகு தான் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாக குழந்தையின் தாய் தெரிவித்தார்.ராஜஸ்தான் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள விவரம் வருமாறு:
பிரசவ வலியில் துடித்த பெண் ராம்கர் நகர அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரசவத்தின்போது, பிறக்கும் குழந்தையின் உடலை வலிந்து இழுத்துள்ளார். அப்போது குழந்தை இரண்டாக பிளந்து பாதி பாகம் மட்டுமே கைக்கு வந்தது.
இச்சம்பவத்திற்குப் பிறகு, அவரது சக செவியர் குழந்தை உடலின் கீழ்ப் பகுதியை மருத்துவமனை மையத்தின் மார்ச்சுவரியில் வைத்துவிட்டார். பின்னர் தொடரவேண்டிய சிகிச்சைக்காக ஜெய்சல்மர் மருத்துவமனைக்கு குழந்தையின் தாயை கொண்டு செல்லும்படி குடும்பத்தினர் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இதில் நடந்துள்ள இன்னொரு கோளாறு என்னவெனில், ஜோத்பூர் உமெத் மருத்துவமனையின் குழந்தை மருத்துவ நிபுணரைக்கொண்டுதான் பிரசவத்தை முடித்துள்ளனர். ராம்கர் மருத்துவமனையின் ஊழியர் கருப்பையிலேயே நஞ்சுக்கொடியை வைத்துவிட்டார்.
பின்னர் டாக்டர் ரவீந்திர சங்க்லா தலைமையிலான மருத்துவர் குழு அப்பெண்ணுக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்து பார்த்ததில் துண்டிக்கப்பட்ட குழந்தையின் தலை கருப்பையிலேயே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னரே இச்சம்பவம் பற்றி பாதிக்கப்பட்டவரின் உறவினருக்கு விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்ணின் கணவர் ராம்கர் மருத்துவமனைக்கு எதிராக ஒரு புகாரை காவல்நிலையத்தில் அளித்தார். ஆனால் இச்சம்பவம் தொடர்பாக இன்னும் ஒருவரும் கைது செய்யப்படவில்லை.
முக்கிய செய்திகள்
இந்தியா
55 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago