தேசிய ஜனநாயக முன்னணியின் மூத்த உறுப்பினரான சிவசேனாவின் உறவு பாஜகவுடன் மோசமாகி வருகிறது. இதனால், மகாராஷ்டிராவில் வரும் மக்களவைத் தேர்தலில் இந்தக் கூட்டணி தொடருமா எனும் கேள்வி எழுந்துள்ளது.
மகாராஷ்டிராவில் ஆளும் பாஜகவிற்கு சிவசேனா ஆதரவளித்து வருகிறது. இங்கு, அக்கட்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பாஜக தம் அமைச்சரவையில் இடமளிக்கவில்லை. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி (தேஜமு) ஆட்சியிலும் சிவசேனாவிற்கு எதிர்பார்த்த முக்கியத்துவம் அமைச்சகத்தில் கிடைக்கவில்லை.
இதனால், பாஜக மீது சிவசேனாவிற்கு ஏற்பட்ட மனக்கசப்பு பெரும் பிளவாக உருவெடுத்து வருகிறது. இவ்விரண்டு கட்சிகளுக்கு இடையில் நின்றுபோன தொடர்பு தற்காலிகமா? நிரந்தரமா? என்பதை இருதரப்பினராலும் தெளிவான விடையைக் கூற முடியவில்லை.
மோடியின் உத்தரவு
பிரதமர் நரேந்திர மோடி உத்தரவின் பேரில், கடந்த நவம்பர் மற்றும் டிசம்பரில் இருமுறை இரண்டு கட்சிகளுக்குள் பேச்சுவார்த்தைக்கு முயற்சிக்கப்பட்டு முடியாமல் போனது. எனினும், தொடர்ந்து பாஜக மீது சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே செய்துவரும் கடும் விமர்சனம் நின்றபாடில்லை.
ராமர் கோயில் விவகாரம்
கடந்த டிசம்பர் 6-ல் ராமர் கோயில் கட்டுவதற்கான அவசரச் சட்டம் இயற்ற வலியுறுத்தி இந்துத்துவாவினர் உ.பி.யின் அயோத்தியில் கூட்டம் நடத்தினர். பாஜகவினரும் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் சிவசேனா மட்டும் கலந்துகொள்ளவில்லை. மாறாக அது தன் தொண்டர்களை மகராஷ்டிராவில் இருந்து அழைத்துச் சென்று அயோத்தியில் தனிக்கூட்டம் நடத்தியது.
முந்த விரும்பாத இருவர்
எனினும், இதுவரையும் சிவசேனா பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவிக்கவில்லை. அதேபோல், பாஜகவும் தேஜமுயில் இருந்து சிவசேனாவை வெளியேற்றவும் இல்லை. இந்த விஷயத்தில் சில முக்கியக் காரணங்களால் இருவருமே முந்திக்கொள்ளவில்லை.
இதற்கு மகாராஷ்டிராவில் தன் கட்சி எம்எல்ஏக்கள், பாஜகவிற்கு தாவி விடுவார்கள் என்ற பயம் சிவசேனாவிற்கு உள்ளது. தாம் முன்வந்து அறிவித்தால் சிவசேனாவுடனான கூட்டணிக்காக மிஞ்சியுள்ள கொஞ்சம் வாய்ப்பும் இழந்து விடுவோம் என பாஜக அஞ்சுகிறது.
சரத்பவார் ஆதரவு
அதேசமயம், தம் ஆதரவை வாபஸ் பெற எண்ணியபோது, மகாராஷ்டிராவில் பாஜகவிற்கு உதவ தேசியவாத காங்கிரஸ்(என்சிபி) தலைவர் சரத்பவார் தயாரானார். இதனால், அவர்களுக்குள் உறவு பலப்படும் என அஞ்சிய சிவசேனா தன் முயற்சியைக் கைவிட்டிருந்தது.
அமித் ஷாவின் அறிவிப்பு
இதனிடையே, இருவாரங்களுக்கு முன் மகாராஷ்டிராவின் லாத்தூரில் தன் நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜக தலைவர் அமித் ஷா பேசினார். இதில் அவர் பாஜக அனைத்து தொகுதியிலும் போட்டியிடுவதாகவும், முன்னாள் கூட்டணி(சிவசேனா) கட்சியை தோற்கடிக்கச் செய்வதாகவும் அறிவித்தார். இம்மாநிலத்தில் 48 தொகுதிகளில் 40-ல் பாஜக வெற்றி பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
சாம்னாவில் கருத்து
இதைக்கேட்டு சிவசேனாவின் நாளிதழான ‘சாம்னா’, பாஜக தனித்துப் போட்டியிட முயற்சிப்பதே நல்லது எனவும் கருத்து கூறியது. இத்துடன், கடந்த 1995 முதல் 1999 வரை மகாராஷ்டிராவில் ஆட்சி தம் கட்சியை வலிமை பெறச் செய்வது முக்கியம் எனவும் உத்தவ் தாக்கரே குறிப்பிட்டிருந்தது.
உத்தவ் தாக்கரேவின் எழுச்சி
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்திடம் சிவசேனாவின் எம்பிக்கள் வட்டாரம் கூறும்போது, ''தற்போது தம் கட்சிக்கு இழப்பு ஏற்பட்டாலும் பாஜகவை தோல்வியுறச் செய்வது என்பதே முக்கிய நோக்கமாக உள்ளது. இதன்மூலம், நம் மாநிலத்தில் பாஜக பழைய நிலைக்கு திரும்புவதுடன், பால் தாக்கரேவைப் போல் முக்கியத் தலைவராக உத்தவ் எழுச்சி பெறுவார்''எனத் தெரிவித்தனர்.
தனித்தே போட்டி
கடந்த முறையைப் போலவே வரும் அக்டோபரின் மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலிலும் சிவசேனா தனித்துப் போட்டியிட விரும்புகிறது. அதற்கு முன்பாக வரும் மக்களவைத் தேர்தலிலும் தன் கட்சியின் வலிமையை நிலைநிறுத்த தனித்தே போட்டியிட விரும்புகிறது.
2014 மக்களவைத் தேர்தல் முடிவு
உ.பி.க்கு அடுத்தபடியான மகாராஷ்டிராவில் மக்களவையின் அதிக தொகுதிகளாக 48 உள்ளது. இதில் கடந்த மக்களவைத் தேர்தலில் இணைந்து போட்டியிட்டதில் சிவசேனாவிற்கு 18, பாஜகவிற்கு 22 தொகுதிகளும் கிடைத்திருந்தன.
மகாராஷ்டிராவில் மும்முனைப்போட்டி
வரும் மக்களவையில் காங்கிரஸுடன் சரத்பவாரின் என்சிபி இணைந்துள்ள நிலையில் மும்முனைப்போட்டி நிலவும் வாய்ப்புகள் தெரிகின்றன. இதன் தாக்கமாக அம்மாநில சட்டப்பேரவையில் கூட்டணி மாற்றங்கள் ஏற்படலாம்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago