உ.பி.யில் ஆதரவற்றோர் பட்டியலில் சாதுக்கள் சேர்ப்பு: மாநில அரசின் ஓய்வூதியம் ரூ.100 உயர்வு

By ஆர்.ஷபிமுன்னா

உ.பியில் ஆதரவற்றோருக்கான அரசு ஓய்வூதியம் ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் சாதுக்களும் சேர்க்கப்பட்டு அவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது.

 

மக்களவை தேர்தல் வருவதை முன்னிட்டு உபியில் பல்வேறு அரசு நலத்திட்டங்கள் தீவிரமாக அமலாகி வருகின்றன. இந்தவகையில், ஆதரவற்றோருக்கான ஓய்வூதியம் ரூ.400-ல் இருந்து உயர்ந்து ரூ.500 என வழங்கப்பட உள்ளது.

 

இது குறித்து உபியின் செய்தித்தொடர்புத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘ஆதரவற்றோராக இருக்கும் ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இவர்கள் போல் ஆதரவற்று இருக்கும் சாதுக்களுக்கும் இந்த ஓய்வூதியம் வழங்கப்படும்.’ எனத் தெரிவித்தனர்.

 

உபியின் பிரயாக்ராஜில் கும்பமேளா துவங்கியது முதல் சாதுக்களுக்காக பாஜக ஆளும் மாநில அரசு ரூ.10,000 சிறப்பு ஓய்வூதியமாக வழங்கும் என சர்ச்சை நிலவி இருந்தது. இதையும் உபி அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

 

தற்போது ரூ.100 உயர்த்தியதுடன், அதில் சாதுக்களையும் சேர்த்திருப்பதனால் அரசிற்கு வருடந்தோறும் ரூ.600 கோடி அதிகமாக செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உபியின் முதல் அமைச்சரான யோகி ஆதித்யநாத்தும் ஒரு சாது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்