குமரியில் ஏழுமலையான் கோயில் கும்பாபிஷேகம்

By என்.மகேஷ் குமார்

கன்னியாகுமரியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் புதிதாக கட்டப்பட்ட ஏழுமலையான் கோயில் கும்பாபிஷேகம் வரும் 27-ம் தேதி காலை 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.

கன்னியாகுமரியில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினர் ஏழுமலையான் கோயிலை கட்டி வருகின்றனர்.

தற்போது இதற்கான திருப்பணிகள் முடிவடைந்து, வரும் 27-ம் தேதி கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இத னையொட்டி, ஆகம சாஸ்திரங் களின்படி, வரும் 22-ம் தேதி மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையில் அங்குரார்ப்பண நிகழ்ச்சி கள் நடைபெற உள்ளன. இதனை தொடர்ந்து, 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை மஹா யாகம், விக்ரஹ பிரதிஷ்டை, மகா கும்பாபிஷேக பணிகள் நடைபெறுகின்றன. 27-ம் தேதி அதிகாலை 4 மணியிலிருந்து காலை 7 மணி வரை, சுப்ரபாதம், கும்பாராதனை, நைவேத்தியம், ஹோமம், மஹா பூர்ணாஹுதி ஆகியவை நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து 27-ம் தேதி காலை 7 மணி முதல் 7.30 மணிக்குள் மகா கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

கும்பாபிஷேக விழாவினை யொட்டி, திருமலை திருப்பதி தேவஸ்தான உயர் அதிகாரிகள், அர்ச்சகர்கள், ஆகம வல்லுநர் கள் திருப்பதியிலிருந்து கன்னியா குமரிக்கு சென்று இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

33 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்