மக்களவை தேர்தலை முன்னிட்டு திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, கொல்கத்தாவின் வரலாற்று சிறப்பு மிக்க ‘பிரிகேட் பரேட்’ மைதானத்தில் நாளை பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதில் சரத்பவார், தேவகவுடா, சந்திரபாபு நாயுடு, மாயாவதி, அகிலேஷ்சிங் யாதவ், பரூக் அப்துல்லா, அர்விந்த் கேஜ்ரிவால், மு.க.ஸ்டாலின், தேஜஸ்வி பிரசாத் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இவர்களுடன் அருணாச்சல பிரதேசத்தில் 5 முறை முதல்வராக இருந்த ஜிகாங் அபாங், முன்னாள் பாஜக அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா, அருண்ஷோரி ஆகியோரும் மேடையேறுகின்றனர்.
இதில், வட கிழக்கு பிராந்தியத்தில் முக்கியத் தலைவராகக் கருதப்படும் ஜிகாங் அபாங் இருதினங்களுக்கு முன் பாஜகவில் இருந்து வெளியேறியவர். இவரது உழைப்பால் பாஜக கடந்த 16 வருடங்களுக்கு முன் வட கிழக்குப் பகுதியில் முதன்முறையாக ஆட்சி அமைத்தது.
கொல்கத்தா பொதுக்கூட்டம் குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் வட்டாரம் கூறும்போது, “காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான முன்னாள் முதல்வர்கள், முன்னாள் பிரதமர்கள் என பலரும் கலந்து கொள்கின்றனர். இதற்கு முன் 1977-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதி பாசு கூட்டிய எதிர்கட்சிகள் கூட்டத்தை விட 5 லட்சம் பேர் அதிகமாக வந்து வரலாறு படைக்க உள்ளனர்” என்று தெரிவித்தனர்.
உடல்நலக் குறைவு காரணமாக சோனியா காந்தி இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதில் ராகுல்காந்தி பங்கேற்பார் என கூறப்படுகிறது. பிரதமர் வேட்பாளராக மம்தா தன்னை முன்னிறுத்த எடுக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியினரும் பிப்ரவரி 3–ல் அதே மைதானத்தில் எதிர்க்கட்சி தலைவர்களுடன் மாபெரும் கூட்டம் நடத்த உள்ளனர். இதன்மூலம் தனது கட்சியின் வலிமையை தேசிய அளவில் பறைசாற்ற திட்டமிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago