மாயாவதி சொல்வதற்கு எல்லாம் இசைந்து அவருக்கு தலைவணங்கிப் போகும் வரைதான் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணி நிலைக்கும் என்று கூறியிருக்கிறார் சமாஜ்வாதி கட்சியின் எம்எல்ஏ ஹரிஓம்.
வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி ஆகியோர் கடந்த சனிக்கிழமை அறிவித்தனர்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் இவ்விரு கட்சிகளும் தலா 38 தொகுதிகளில் போட்டியிடுன் என அறிவிக்கப்பட்டது.
மேலும், மாயாவதி பேசும்போது "இந்தக் கூட்டணியால் மோடி, அமித்ஷா தூக்கம் இழப்பார்கள்" என்று பேசினார்.
இவ்விரு கட்சிகளும் எதிரெதிர் களத்தில் நின்று தேர்தலை எதிர்கொண்டவை. ஆனால், இப்போது பாஜகவை வீழ்த்துவது என்ற ஒரே புள்ளியில் இணைந்து இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன.
இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியின் எம்எல்ஏ ஹரிஓம், "ஃபெரோஸாபாத்தில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி ஒத்துவராது. இந்த கூட்டணியானது அகிலேஷ் எப்போதுமே சகோதரி சொல்வதற்கு தலைவணங்கி கால்கட்டி நின்றால் மட்டுமே நீடித்திருக்கும்" என்று கூறியுள்ளார்.
கூட்டணி அமைந்து 2 நாட்களிலேயே சமாஜ்வாதி எம்எல்ஏ ஒருவர் கூட்டணிக்கு போர்க்கொடி உயர்த்தியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago