தேசத்தந்தை மஹாத்மா காந்தியின் நினைவுநாளில் அவரை சுட்டுக்கொன்ற கோட்சேவின் கொடும்பாவியை உபியின் அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தில் எரித்து ஆர்பாட்டம் நடைபெற்றது. இதை மாணவர் மற்றும் மாணவிகள் பேரவை சார்பில் நடத்தப்பட்டது.
மத்திய பல்கலைகழகமான அதன் வளாகத்தில் உள்ள மவுலானா ஆசாத் நூலகத்தில் இன்று கூடிய சுமார் 500 மாணவ, மாணவிகள் நுழைவு வாயில் வரை ஊர்வலம் நடத்தினர். இதில், அலிகர் பல்கலையின் மாணவிகள் பேரவை சார்பில் ஆப்ரீன் பாத்திமாவும் தம் நிர்வாகிகளுடன் கலந்து கொண்டார்.
அதில் கோட்சேவையும், ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் அமைப்பையும் கண்டித்து ‘கோட்சே முர்தாபாத்’, ஆர்எஸ்எஸ் முர்தாபாத் எனவும் கோஷங்கள் எழுப்பினர். ’இந்துஸ்தான் சிந்தாபாத்’, ‘காந்தி சிந்தாபாத்’ என ஆதரவு கோஷங்களும் எழுப்பியிருந்தனர். பிறகு தாம் கொண்டு வந்த கோட்சேவின் கொடும்பாவியை பல்கலையின் நுழைவு வாயில் முன் எரித்தனர்.
இது குறித்து ’இந்து தமிழ் திசை’ இணையத்திடம் அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் மாணவர் பேரவை தலைவரான சல்மான் இம்தியாஸ் கூறும்போது, ‘கோட்சேவின் கொள்கைகள் கொண்டவர்கள் தான் தற்போது நம் நாட்டின் மதநல்லிணக்கத்தையும், அமைதியையும் குலைத்து வருகின்றனர். எனத் தெரிவித்தார்.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் அப்பேரவையின் நிர்வாகக்குழு உறுப்பினரும் தமிழருமான கே.கவுதம் கூறும்போது, ‘இங்கு எரிக்கப்பட்ட கோட்சேவின் கொடும்பாவியால் பலரது மனம் புண்படும் எனக் கூறுகிறார்கள் ஆனால், தசரா சமயத்தில் ராவணன் கொடும்பாவியை எரித்து திராவிடர் மற்றும் தலீத் மக்களின் உணர்வுகள் புண்படுத்தப்படுவது நியாயமா?’ எனக் கேள்வி எழுப்பினார்.
ஜனவரி 26-ல் குடியரசு தினத்தை முன்னிட்டு பாஜகவின் இளைஞர் அமைப்பான அகில பாரதிய வித்ய பரிஷத்தின் சில மாணவர்கள் கொடி யாத்திரை நடத்த முயன்றனர். இதற்கு அனுமதி அளிக்காமல் அலிகர் பல்கலை நிர்வாகம் தடை விதித்தது.
அதை நடத்திய இரண்டு மாணவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீசும் அளித்திருந்தது. இந்த கொடி யாத்திரைக்கு பதிலடியாக இந்த கோட்சேவை கண்டிக்கும் வகையிலான ஊர்வலத்தை, காந்தியின் நினைவு நாளில் முதன்முறையாக நடத்தி உள்ளனர்
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago