மேகாலயா சுரங்கத்தில் இருவர் உயிரிழப்பு: மீட்பு பணியில் கடற்படை

By ஏஎன்ஐ

மேகாலயா நிலக்கரி சுரங்கத்தில் மீண்டும் ஒரு விபத்து ஏற்பட்டதில் திடீர் சரிவு காரணமாக சுரங்கத் தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.

மேகாலயா மாநிலத்தில் கிழக்கு ஜாய்ன்டியா மலைத்தொடரில் பாயும் லைட்டின் ஆற்றின் அருகே உள்ள மூக்னூர் கிராமத்தில் அமைந்துள்ள சுரங்கத்தில் கடந்த மாதம் டிசம்பர் 13ஆம் தேதி 15 பேர் சிக்கிக் கொண்டனர்.

இங்குள்ள சுரங்கம் அகன்று இல்லாமல் குறுகலாக மிக ஆழமாக அமைந்துள்ளதால் இதனை  எலிப்பொறி சுரங்கம் என அழைக்கின்றனர்.

இந்த ஆபத்தான சுரங்கத்தில் இரண்டு வாரங்களுக்குமேல் ஆகியும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலை தொடர்கிறது. எனினும் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சுரங்கத்தில் இருவர் உயிரிழந்ததுள்ளனர்.

இதுகுறித்து கிழக்கு ஜாண்டியா ஹில்ஸ் காவல் கண்காணிப்பாளர் எஸ்.நாங்க்ட்ஜெர் தெரிவிக்கையில், 

இச்சுரங்கத்தில் தொழிலாளர்கள் நிலக்கரிகளைப் பிரித்தெடுக்க முயன்றபோது பாறைகள் அவர்கள்மீது விழுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இக்குவாரியின் இரு உரிமையாளர்களில் தலைமறைவாகியுள்ள ஒருவரைக் கண்டுபிடிப்பதற்காக விசாரணை தொடர்கிறது

இதற்கிடையில் சிக்கிக்கொண்ட நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கை மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது. தீயணைப்பு வாகன குழாய்களிலிருந்து கிட்டத்தட்ட 7 மணிநேரமாக ஒன்றும் 6.30 மணி நேரமாக இன்னொன்றுமாக வெகுநீண்ட குழாய்களின் மூலம் நீர் வெளியேற்றும் பணி  நடைபெறுகிறது.

இரு நீண்ட குழாய்களிலும் 4 அடிகள் குறைக்கப்பட்டன. ஆனால் ஒன்றில் மட்டும் கடுமையான ஒழுகல் காரணமாக நீர் அளவு அதிகரித்து, 2 அடி தண்ணீர் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. இரு குழாய்கள் மூலமாக இதுவரை மொத்தம் 12,15,000 லிட்டர் நீர் வெளியேற்றப்பட்டது.

மீட்புப் பணிகளில் இணைந்து தேசிய பேரிடர் மீட்புப் பணியாளர்களும் இந்தியக் கடற்படையின் பல்வேறு பிரிவுகளைச் சார்ந்தவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இச்சுரங்கத்தை தனியார் இருவர் அனுமதியின்றி நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

55 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்