தொலைக்காட்சிகளில் பேட்டி தரும் புலந்த்ஷெஹர் கலவரக் குற்றவாளிகளை கைது செய்வதில் உ.பி. போலீஸார் மெத்தனம் காட்டுவதாகப் புகார் எழுந்துள்ளது. இந்த கலவரத்தில் பலியான ஆய்வாளர் வழக்கில் கைதான ராணுவ வீரரிடம் கொலைக்கு பொறுப்பு ஏற்கும்படியும் உ.பி. போலீஸார் வற்புறுத்துவதாகக் கூறப்படுகிறது.
உ.பி.யின் புலந்த்ஷெஹரின் மஹாவ் கிராமத்தில் கடந்த 3-ம் தேதி பசுவதையின் பெயரில் கலவரம் நிகழ்ந்தது. இதில், புலந்ஷெஹரின் சாய்னா காவல் நிலைய ஆய்வாளர் சுபோத் குமார் சிங் மற்றும் மாணவர் சுபம் சிங் ஆகியோர் கொல்லப்பட்டனர். கலவரத்தை நடத்தியதாகவும், இருவரது கொலை வழக்கிலும் முக்கிய குற்றவாளிகளாக புலந்த் ஷெஹர் மாவட்ட பஜ்ரங்தளம் அமைப்பாளரான யோகேஷ் ராஜ், அவரது அமைப்பு சகாக்களான ஷிகார் அகர்வால் மற்றும் உபேந்திர ராகவ் ஆகியோர் மீது வழக்கு பதிவானது. மேலும், வழக்கில் குறிப்பிட்ட 76 பேரில் 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் தலைமறைவாக உள்ளனர். ஆனால், அவர்கள் தொலைக்காட்சி களுக்கு பேட்டி தருவது தெரிந்தும் முக்கிய குற்றவாளிகளை பிடிப் பதில் உ.பி. போலீஸார் சுணக்கம் காட்டி வருவதாகப் புகார் எழுந் துள்ளது.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் போலீஸார் கூறும் போது, ‘‘ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பவர்களை பிடிக்க அதிகாரி கள் ஆர்வம் காட்டவில்லை. முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் நொய்டா வில் ஒரு தொலைக்காட்சி ஸ்டுடி யோவில் பேசுவதாக தகவல் கிடைத் தும் அவர் கைது செய்யப்பட வில்லை. இதற்கு பதிலாக கைது செய்யப் பட்ட ராணுவ வீரரை ஆய்வாளர் சுபோத்தின் கொலைக்கு பொறுப்பேற்கும்படி வற்புறுத்தி வருகின்றனர்’’ எனத் தெரிவித்தனர்.
சுபோத்தை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் வீடியோ கிடைத்திருப்பதாகக் கூறி, அதே கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரரான ஜித்து என்கிற ஜிதேந்திரா மல்லீக் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடைபெற்று வரும் விசாரணையில் ஜித்து, தான் சம்பவ இடத்தில் இருந்ததாகவும், ஆனால் ஆய்வாளரை கொல்ல வில்லை என்றும் கூறி வருகிறார். இந்த வழக்கில் சுபோத் சுட்டுக் கொல்லப்பட்ட துப்பாக்கி இன்னும் கிடைக்கவில்லை. இதனால், சுபோத்தை கொன்றது நான்தான் என ஒப்புக்கொள்ளும்படி ஜித்துவை போலீஸார் வற்புறுத்தி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
புலந்த்ஷெஹர் சம்பவம் மதக் கலவரத்தை உருவாக்கும் நோக்கில் திட்டமிடப்பட்டது எனக் கருதப்படுகிறது.
எனவே, ஆய்வாளர் கொலை வழக்கை முடித்து வைப்பதில் உ.பி. அரசு அதிகம் ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
55 mins ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago