கர்நாடக மாநிலத்தில் ரூ. 5 கோடி செம்மரம் பறிமுதல்; ஆந்திர போலீஸார் நடவடிக்கை

By என்.மகேஷ் குமார்

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதி யிலிருந்து சட்டவிரோதமாக வெட்டி கடத்திச் செல்லப்பட்டு, கர்நாடகாவில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த ரூ. 5 கோடி மதிப்புள்ள செம்மரங்களை கடப்பா போலீ ஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கடத்தல்காரர் ஒருவரையும் கைது செய்தனர்.

திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியிலிருந்து கூலி ஆட்கள் மூலம், கர்நாடகா மாநிலத்திற்கு டன் கணக்கில் கடத்திய செம்மரங் களை நேற்று ஆந்திர மாநிலம், கடப்பாவை சேர்ந்த போலீஸார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 5 கோடி என கூறப்படுகிறது. எஸ்பி மஹந்தி உத்தரவின் பேரில் கடந்த நவம்பர் மாதம் 24-ம் தேதி, கடப்பா போலீஸார், பெங்களூரு அருகே செம்மர கடத்தல் கும்பலை சேர்ந்த முஜீப் பாய் என்கிற மூசா மற்றும் முகமது கயாஜ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். இவர்கள் கொடுத்த தகவல்படி, நேற்று, கர்நாடக மாநிலம் ஹொசப்பேட்டா, கம்பாளிபுரா ஆகிய இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ஹொசப்பேட்டாவில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 177 செம்மரங்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நயாஜ் எனும் கடத்தல்காரர் கைது செய்யப்பட்டார். மேலும் ஒரு காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்த செம்மரங்கள், லாரி மூலம் கடப்பாவுக்கு கொண்டு வரப்பட்டன. தற்போது கைது செய்யப்பட்ட நயாஜ் என்பவர் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக செம்மர கடத்தலில் ஈடுபட்டு, வெளி நாடுகளுக்கு பல டன் செம்மரங் களை இதுவரை கடத்தியுள்ள தாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

இந்தியா

4 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்