தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் 67 சதவீத வாக்குகளும் ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் 72.87 சதவீத வாக்குகளும் பதிவாகின. வரும் 11-ம் தேதி மத்தியப் பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர், தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன.
தெலங்கானாவில் 119 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 1,821 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நக்ஸலைட் ஆதிக்கம் நிறைந்த 13 தொகுதிகளில் மட்டும் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. மற்ற 106 தொகுதிகளில் காலை 8 மணிக்கு தொடங்கி நேற்று மாலை 5 மணி வரை விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது. நகர்புறத்தை விட, கிராமப்புறங்களில் வாக்கு சதவீதம் அதிகமாக இருந்தது. ஹைதராபாத்தில் வாக்குப்பதிவு மந்த மாக இருந்தது.
முதல்வர் கே.சந்திரசேகர ராவ் சித்திபேட்டா தொகுதியில் சிந்தமடகா கிராமத்தில் வாக்களித்தார். நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, வெங்கடேஷ், மஹேஷ் பாபு, சானியா மிர்சா, நடிகை அமலா, அசாருதீன் உள்ளிட்டோர் ஹைதராபாத்தில் வாக்களித்தனர்.
முதல்முறையாக வாக்காளர்களுக்கு ஒப்புகைச் சீட்டுகள் வழங்கப்பட்டன. ஹைதராபாத் ராஜேந்திர நகர் தொகுதி யில் தடையை மீறி செல்ஃபி எடுத்த இளைஞர் சிவசங்கர் கைது செய்யப்பட்டார்.
குத்தா ஜ்வாலாவுக்கு ஏமாற்றம்
இறகு பந்து வீராங்கனை குத்தா ஜ்வாலா, அவரது தந்தை மற்றும் சகோதரி பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர், வாக்களிக்க முடியாமல் போனது வருத்த மளிப்பதாகத் தெரிவித்தார். தெலங்கானா நிதி அமைச்சர் ஈடல ராஜேந்தி ராவின் தந்தை, இயக்குநர் ராஜமவுலியின் மனைவி ரமா ராஜமவுலி ஆகியோரின் பெயர்களும் பட்டியலில் இல்லை.
அமெரிக்காவில் வசிக்கும் சதீஷ் குமார் ஹைதராபாத்திலும் தென்னாப்பிரிக் காவில் வசிக்கும் சரிதா கவுட் செகந்திரா பாத்திலும் வாக்களித்தனர்.
மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நேரம் முடிந்தாலும், வரிசையில் காத்திருந்தவர் கள் தொடர்ந்து வாக்களிக்க அனுமதிக்கப் பட்டனர். மொத்தம் 67 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 2014 தேர்தலில் 68.5 சதவீத வாக்கு பதிவானது.
ராஜஸ்தான் தேர்தல்
ராஜஸ்தானில் மொத்தம் 200 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் ஆல்வார் மாவட்டம், ராம்கர் தொகுதி பகுஜன் சமாஜ் வேட்பாளர் லட்சுமண் சிங் மாரடைப்பால் உயிரிழந்ததால் அந்தத் தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதர 199 தொகுதிகளுக்கும் நேற்று வாக்குப்பதிவு நடை பெற்றது.
தற்போது ராஜஸ்தானில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. முதல்வர் வசுந்தரா ராஜே, ஜல்ராபதான் தொகுதியில் போட்டி யிடுகிறார். காங்கிரஸ் முதல்வர் வேட்பாள ராக கருதப்படும் அந்த கட்சியின் மாநிலத் தலைவர் சச்சின் பைலட், டோங்க் தொகுதியிலும் காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் சர்தார்புரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். ஒட்டுமொத்தமாக 2,274 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்த தேர்தலில் ஆளும் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. வாக்குப்பதிவு நடை பெறும் 199 தொகுதிகளிலும் பாஜக வேட் பாளர்களை நிறுத்தியுள்ளது. காங் கிரஸ் 194 தொகுதிகளில் போட்டி யிடுகிறது. அதன் கூட்டணி கட்சி களான ராஷ்டிரிய ஜனதா தளம்-2, ராஷ்டிரிய லோக் தளம்-2, தேசியவாத காங்கிரஸ் ஒரு தொகுதியில் போட்டியிடு கின்றன.
பகுஜன் சமாஜ் 196, மார்க்சிஸ்ட் 28, இந்திய கம்யூனிஸ்ட் 17, ஆம் ஆத்மி 100 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. இவை தவிர பல்வேறு பிராந்திய கட்சிகளும் சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர்.
வசுந்தரா ராஜே நம்பிக்கை
ராஜஸ்தானில் மொத்தம் 4.76 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். மாநிலம் முழுவதும் 51,965 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. சுமார் 1.44 லட்சம் பாதுகாப்புப் படை வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஜல்ராபதான் நகர வாக்குச்சாவடியில் முதல்வர் வசுந்தரா ராஜே வாக்களித்தார். அவர் நிருபர்களிடம் கூறியபோது, மக்களின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைப்போம்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஜெய்ப்பூரின் ஜலுபுரா வாக்குச்சாவ டியில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் சச்சின் பைலட் தனது வாக்கைப் பதிவு செய்தார். அவர் கூறியபோது, "பெரும் பான்மை பலத்துடன் காங்கிரஸ் ஆட்சி யைக் கைப்பற்றும்" என்றார். காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட், ஜோத்பூரில் வாக்களித்தார்.
காலையில் மந்தமாக இருந்த வாக்குப் பதிவு பிற்பகலில் விறுவிறுப்படைந்தது. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், 72.83 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
தேர்தல் முடிவுகள்
மத்தியப் பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வரும் 11-ம் தேதி வெளியாகின்றன. இதனிடையே, 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை பல் வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒளிபரப்பி வருகின்றன.
முக்கிய செய்திகள்
இந்தியா
19 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago