காங்கிரஸ், பாஜக ஆகிய இரு தேசிய கட்சிகளும் மாறி, மாறி ஆட்சி செய்து வருகின்றன. இவைகளுக்கு மாற்றாக இந்திய அரசியலில் மாற்றம் தேவை. இதற்காக 3-வது அணி என்பது மாற்றாக அமையாது. இந்திய அரசியலிலேயே இதற்கொரு மாற்று தேவை என தெலங்கானா மாநில காபந்து முதல்வர் கே. சந்திரசேகர ராவ் நேற்று ஹைதராபாத்தில் கூறினார்.
தெலங்கானா மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று கே. சந்திரசேகர ராவ் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள் ளார். இம்மாநிலத்தில், காங் கிரஸ், பாஜக ஆகிய இரு தேசிய கட்சிகளும் தோல்வி அடைந்துள்ளன. தனிப் பெரும் மெஜாரிட்டியுடன் டிஆர்எஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவு கள் வெளியான பின்னர், கே.சந்திரசேகர ராவ், ஹைத ராபாத்தில் உள்ள தனது கட்சி அலுவலகமான ‘தெலங் கானா பவனில்’ செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சி மீதும், ஆட்சி மீதும், என் மீதும் நம்பிக்கை வைத்து வாக்களித்து வெற்றி பெற செய்த மக்கள் அனை வருக்கும் நன்றி. இது தெலங்கானா மக்களின் வெற்றி. இந்த வெற்றியால் டிஆர்எஸ் கட்சியினருக்கு கர்வம் வந்து விடக்கூடாது. பொறுப்புதான் வரவேண்டும். மக்கள் மீண்டும் நமக்கு சேவை செய்ய வாய்ப்பு அளித்துள்ளனர். இதனை நாம் முழு மனதோடு, முழு வீச்சோடு, முன்பை விட அக்கறையோடு செய்ய வேண்டும்.
தேர்தலில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற் றப்படும். இதில் குறிப்பாக 1 கோடி ஏக்கர் நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி வழங்குவதே எனது லட்சியமாகும். விவசாயிகள், தலித், பழங்குடியினர், சிறுபான்மையினருக்காக இந்த அரசு பல திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றும். இளைஞர்களின் வேலை வாய்ப்புக்கு முதலிடம் அளிக்கப்படும். கூடிய விரைவில் அரசு துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்.
மறு வாக்குப்பதிவு என்பதே இல்லாமல் மிகவும் அமைதியான முறையில் தேர்தல் நடந் துள்ளது. இது ஜனநாயக வெற்றி யாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
42 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago