ம.பி.யின் மூன்று தொகுதிகளில் நோட்டாவால் காங்கிரஸ் தோல்வி

By ஆர்.ஷபிமுன்னா

ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் மூன்றில் பாஜகவிடம் இருந்து ஆட்சியைப் பறித்துள்ளது. ஆனால், அக்கட்சிக்கு ம.பி. மாநிலத்தின் மூன்று தொகுதிகளில் நோட்டாவிற்கு கிடைத்த வாக்குகளை விட குறைந்த அளவு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

ஐந்து மாநிலங்களிலும் சேர்த்து மொத்த வாக்குகளில் 1.5 சதவீதம் நோட்டாவிற்குச் சென்றுள்ளன. இவற்றில், சத்தீஸ்கரில் 2, ராஜஸ்தானில் 1.3, தெலங்கானா 1.1, ம.பி.யில் 0.4 மற்றும் மிசோரமில் 0.5. சதவீதமாக விழுந்தன. இந்த நோட்டா வாக்குகள், ராஜஸ்தானில் 4,66,937, ம.பி.யில் 5,22,414, சத்தீஸ்கரில் 2,61,269, தெலங்கானா 2,21,842 மற்றும் மிசோரமில் 2,917 அளிக்கப்பட்டுள்ளன.

இவற்றில், ம.பி.யில் நோட்டாவிற்கு கிடைத்த வாக்குகளை விட குறைந்த அளவு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் 3 பேர் தோல்வி அடைந்துள்ளனர். அவற்றில் காங்கிரஸ் தோல்வி பெற்ற வாக்குகள் வித்தியாசம் ஜரோராவில் 511, பீனா 632 மற்றும் கோலாரஸ் 720 ஆகும்.

ம.பி.யில் 4,337 வாக்குகளில் ஆட்சி இழந்த பாஜக

ம.பி.யில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி செய்த பாஜக நான்காம் முறைக்கான வாய்ப்பை ஏழு தொகுதிகளின் தோல்வியால் இழந்துள்ளது. இந்த ஏழு தொகுதிகளில் பாஜக இழந்த மொத்த வாக்குகள் 4,337.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்