புலந்த்ஷெஹரில் நடைபெற்றது கும்பலாலான படுகொலை அல்ல, ஒரு விபத்து என உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்துள்ளார். தன் மாநிலப் போலீஸ் அதிகாரி படுகொலையில் அவர் முதன் முறையாக இன்று பேசியுள்ளார்.
உபியின் பிரபல இந்தி நாளிதழான ’தெய்னிக் ஜாக்ரன்’ இன்று டெல்லியில் நடத்திய ஒரு விழாவில் உபி முதல்வர் யோகி கலந்து கொண்டார். அப்போது அவர் புலந்த்ஷெஹரில் கொல்லப்பட்ட இருவர் குறித்து மூன்று நாட்களுக்கு பின் தமது கருத்தை வெளியிட்டார்.
அதில் யோகி கூறும்போது, ‘புலந்த்ஷெஹரில் பசுவதையை எதிர்த்து நடைபெற்ற சம்பவத்தில் இரு உயிர்கள் பலியாயின. இதை கும்பலாலான படுகொலை(மாப் லின்ச்சிங்) எனக் கூற முடியாது. அது ஒரு விபத்து.’ எனத் தெரிவித்தார்.
பசுவதை எனும் பெயரில் புலந்த்ஷெஹரில் நடைபெற்ற கலவரத்தில் உபியின் காவல்துறை ஆய்வாளர் சுபோத் குமார் சிங்(47) மற்றும் சுனித் குமார்(20) எனும் கல்லூரி மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
இதன் மீது பேட்டி அளித்த சுபோத்தின் இளையமகன் அபிஷேக் குமார் சிங், ‘பசுப்பாதுப்பின் பெயரில் கும்பல் படுகொலையை நிறுத்துங்கள்’ என வேண்டுகோள் விடுத்திருந்தார். இவரது பேட்டி சமூக வலதளங்களில் வைரலானதை அடுத்து, முதல்வர் யோகி இந்த கருத்து தெரிவித்திருப்பதாகக் கருதப்படுகிறது.
கடந்த திங்கள்கிழமை நடந்த கலவரம் குறித்து அன்று மாலை முதல்வர் யோகி தனது காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற ஆலோசனையில் அவர் சுமார் பத்து நிமிடம் மட்டுமே ஆய்வாளர் சுபோத் கொல்லப்பட்டதன் மீது பேசியதாகக் கூறப்பட்டது.
மற்ற நேரம் முழுவதிலும் பசுவதையை தடுப்பது குறித்தே பேசியது அவரது அதிகாரிகள் இடையே சர்ச்சையை கிளப்பியிருந்தது. இத்துடன், அன்றைய தினம் முதல்வர் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட பத்திரிகை செய்தியில் பசுவதை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டிருந்தது.
அதில், தம் காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டதன் மீது யோகி எதையும் குறிப்பிடாததும் அதிருப்தியை கிளப்பி இருந்தது. அதேபோல், கலவரம் நடந்த அன்று தனது சொந்த மாவட்டத்தில் நடந்த கலைநிகழ்ச்சியில் முதல்வர் யோகி கலந்து கொண்டதும் சர்ச்சையை கிளப்பி இருந்தது.
முக்கிய செய்திகள்
இந்தியா
13 mins ago
இந்தியா
32 mins ago
இந்தியா
5 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago