தேசிய அரசியலில் ஈடுபட உள்ளதால் மகனை செயல் தலைவராக்கிய முதல்வர் சந்திரசேகர ராவ்

By என்.மகேஷ் குமார்

தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர், டிஆர்எஸ் கட்சி சார்பில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது. தெலங்கானா தேர்தலில் 119 தொகுதிகளில் போட்டியிட்டு, 88 தொகுதிகளை டிஆர்எஸ் கட்சி கைப்பற்றியது.

இதனைத் தொடர்ந்து, தெலங் கானா முதல்வராக கே.சந்திரசேகர ராவ் பதவியேற்றார்.

இந்நிலையில், தேசிய கட்சி களான காங்கிரஸ், பாஜக இல்லாத புதிய கூட்டணியை ஏற்படுத்தி, தேசிய அரசியலில் கால் பதிக்க சந்திரசேகர ராவ் முடிவு செய்துள் ளார். எனவே, தனது மகனும், முன் னாள் அமைச்சருமான கே. டி.ராமா ராவை, டிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவராக சந்திரசேகர ராவ் நேற்று நியமனம் செய்தார். அவரது இந்த முடிவை, டிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த அனைவரும் வரவேற்றுள்ளனர்.

நேற்று மாலை ஹைதராபாத் தில் உள்ள தெலங்கானா பவனில் டிஆர் எஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் கே.டி. ராமாராவ் செயல் தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

கட்சி உறுப்பினர் சேர்க்கை, மாவட்டம்தோறும் கட்சி அலுவல கங்கள் அமைத்தல், அரசு நலத் திட்டங்களை மக்களுக்கு சென்றடைய வழி வகுத்தல், எம்.பி., எம்எல்ஏ வேட்பாளர்களை தேர்வு செய்தல், மாநிலம் முழுவதும் பல்வேறு கமிட்டிகளை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை இனி கே.டி.ராமாராவ் (42) கவனித்து கொள்வார் என தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

இந்தியா

42 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்