வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி வரும் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இதனையொட்டி, வரும் 18,19 ஆகிய தேதிகளில் உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவுள்ளனர்.
இதுகுறித்து தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு தலைமையில் உயர் அதி காரிகளின் ஆலோசனைக் கூட்டம் திருமலையில் நடந்தது. இதில் ஸ்ரீநிவாச ராஜு பேசியதாவது:
வைகுண்ட ஏகாதசி, துவா தசியை முன்னிட்டு, அனைத்து முன் பதிவுகளும் ரத்து செய்யப்படு கின்றன. தங்கும் அறைகள் உட்பட சர்வ தரிசன டோக்கன் முறை, திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவதும் வரும் 16-ம் தேதியுடன் நிறுத்தப்படுகிறது.
17-ம் தேதி வைகுண்ட வரிசையில் இருக்கும் பக்தர்கள், மறுநாள் 18-ம் தேதி சொர்க்க வாசல் வழியாக சுவாமியை தரிசிக் கலாம். 18, 19 ஆகிய தேதிகளில் விஐபி பிரேக் தரிசனமும் முழுமை யாக ரத்து செய்யப்படுகிறது.
இதனால், வெறும் சர்வ தரிசனம் மூலம் சாமானிய பக்தர்கள் ஏழுமலையானை தரிசிப்பார்கள். இந்த இரு நாட்களும் சுமார் 44 மணி நேரம் வரை சாமானிய பக்தர்கள் மூலவரை தரிசிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 mins ago
இந்தியா
35 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago