டெல்லியில் பாஜகவின் புதிய தலைமை அலுவலகம் ராசியானது அல்ல எனப் புகார்

By ஆர்.ஷபிமுன்னா

டெல்லியில் பாஜகவின் புதிய தலைமை அலுவலகக் கட்டிடம் ராசியானது அல்ல எனப் புகார் கிளம்பியுள்ளது. இதனால், மக்களவைத் தேர்தல் பணி மீண்டும் பழைய அலுவலகத்தில் செயல்பட வேண்டும் என அக்கட்சியினர் கோரத் தொடங்கியுள்ளனர்.

சுமார் பத்து வருடங்களுக்கும் மேலாக பாஜகவின் தலைமை அலுவலகம் டெல்லியின் இருதயப்பகுதியான, எண் 11, அசோகா சாலையில் இயங்கி வந்தது. இதற்கு ஐந்து கி.மீ. தொலைவில் பாஜகவின் புதிய அலுவலகம் கட்டிய பின் அங்கு மாற்றப்பட்டது.

எண் 6, பண்டிட் தீன்தயாள் உபாத்யா மார்க்கிற்கு மாறிய புதிய தலைமை அலுவலகத்தை கடந்த பிப்ரவரி 19-ல் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.  இதற்கு தற்போது ராசியில்லை என ஒரு கருத்து உருவாகி வருகிறது.

இங்கு மாறிய பின் மார்ச்சில் உ.பி.யின் மக்களவைத் தொகுதிகளான கோரக்பூர் மற்றும் பூல்பூரில் பாஜகவிற்கு தோல்வி கிடைத்தது. இந்த இரண்டும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவினுடையது என முக்கியமான தொகுதிகள்.

இரண்டாவது தாக்கமாக உ.பி.யின் சட்டப்பேரவை தொகுதியான கைரானாவிலும் பாஜகவிற்கு தோல்வி. அடுத்து கர்நாடாகாவில் பாஜக ஆட்சி அமைத்தும் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் பி.எஸ்.எடியூரப்பா தம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று.

கர்நாடகாவில், காங்கிரஸும், மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதா தளமும் இணைந்து ஆட்சி அமைத்துக்கொண்டன. இங்கு நடைபெற்ற மூன்று சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலில் பாஜகவால் ஒரு தொகுதியை மட்டுமே தக்கவைக்க முடிந்தது.

இப்பட்டியலில் கடைசியாக நடைபெற்ற ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தன் மூன்று மாநிலங்களில் காங்கிரஸிடம் ஆட்சியை இழந்தது. சத்தீஸ்கர், ம.பி. மற்றும் ராஜஸ்தான் ஆகிய இந்த மூன்றிலும் தொடர்ந்து 15 வருடங்களாக பாஜக ஆட்சி செய்திருந்தது.

தெலங்கானாவில் பாஜக அதிகம் எதிர்பார்ப்பில் இருந்து அதற்கு இருந்த ஐந்து எம்எல்ஏக்களின் எண்ணிக்கை ஒன்றாகக் குறைந்தது. இந்தநிலை மக்களவைத் தேர்தலிலும் தொடர்ந்து விடக் கூடாது என பாஜகவின் சில தலைவர்களுக்கு அச்சம் எழுந்துள்ளது.

இதற்கு தம் புதிய தலைமை அலுவலகம் காரணம் எனத் தவறாகக் கருதி அதை மீண்டும் பழைய கட்டிடத்திற்கு மாற்ற வேண்டும் எனப் புகார் எழுந்துள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்திடம் டெல்லி பாஜக வட்டாரம் கூறும்போது, ''புதிய கட்சி அலுவலகம் மாறியது முதல் பெரிய வெற்றி இதுவரை கிடைக்கவில்லை என்ற பேச்சு முக்கிய நிர்வாகக் கூட்டங்களிலும் பேசப்பட்டு வருகிறது. பழைய அலுவலகத்திற்கு மாறி, அங்கிருந்து மக்களவைத் தேர்தலுக்கானப் பணியை தொடங்க வேண்டும் என கட்சித் தலைமையிடம் வலியுறுத்தல் எழுந்துள்ளது'' எனத் தெரிவித்தனர்.

சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் மூன்று கட்டிடங்களாக பாஜகவின் புதிய தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இதில், நிர்வாகிகளுக்கும் அவர்களது செயல்பாடுகளுக்கும் என 70 அறைகள் அமைந்துள்ளன. இதற்கான பணிகள் கடந்த ஆகஸ்ட் 2016-ல் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்