அனுமார் மீது தன்கட்சியினர் கருத்திற்கு பிரதமர் தம் நிலைப்பாட்டை விளக்க வேண்டும் –சுவாமி அதோக்ஷஜனந்த்

By ஆர்.ஷபிமுன்னா

இந்துக்களின் கடவுளான அனுமாரின் சாதி, மதங்கள் என பாஜக தலைவர்கள் பல்வேறு வகை கருத்து கூறி வருகின்றனர். இதன் மீது பிரதமர் நரேந்திர மோடி தம் நிலைப்பாட்டினை விளக்க வேண்டும் என சங்கராச்சாரியக்களில் ஒருவரான சுவாமி அதோக்ஷஜனந்த் தியோ தீர்த் வலியுறுத்தி உள்ளார்.

 

கடந்த நவம்பர் 27-ல் ராஜஸ்தானில் செய்த தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் யோகி, ஹனுமரை மிகவும் பிற்படுத்தப்பட்டவர் எனக் கூறி சர்ச்சையை துவக்கினார். இதையடுத்து, உபி மாநில மேலவையின் பாஜக உறுப்பினரான புக்கல் நவாப், ஹனுமன் ஒரு முஸ்லிம் என்றார்.

 

தமது ஜாட் சமூகத்தை சேர்ந்தவர் ஹனுமர் என அம்மாநில சிறுபான்மைத்துறை அமைச்சரான லஷ்மி நாராயண் சவுத்ரி தெரிவித்திருந்தார். டெல்லியின் பாஜக எம்பியான உதித்ராஜ் ஹனுமரை ஒரு ஆதிவாசி எனக்கூற, உபி மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் சேத்தன் சவுகான் ஹனுமர் ஒரு சிறந்த மல்யுத்த வீரர் என்றும் கடைசியாகக் கருத்து கூறினார்.

 

இந்நிலையில், ஹனுமர் மீதான கருத்துக்கள் மீது பாஜகவிம் மூத்த தலைவர்களும், தலைமை நிர்வாகிகளும் மவுனம் காத்து வருகின்றனர். இதை குறிப்பிடும் வகையில், தம் கட்சியினரின் ஹனுமர் மீதானக் கருத்துக்கள் மீது பிரதமர் மோடி தம் நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

இது குறித்து உபியின் மதுராவின் நிகழ்ச்சிக்கு வந்த சுவாமி அதோக்ஷஜனந்த் தியோ தீர்த் கூறும்போது, ‘ஒருபுறம் ராமர் கோயிலை கட்டவேண்டும் என அவ்வப்போது பாஜக தலைமை வலியுறுத்துகிறது. மற்றொரு பக்கம், அக்கட்சியினர் இந்துக்களின் மனது புண்படும்படி இந்துக்கடவுகளின் மீது அபாண்டமான கருத்துக்களை தெரிவிக்கின்றனர். எனவே, இவர்கள் கருத்து குறித்த தனது நிலைப்பாட்டை பிரதமர் மோடி விளக்க வேண்டும்.’ எனத் தெரிவித்தார்.

 

ஹனுமர் விவகாரத்தில் சுவாமி தீர்த் மேலும் கூறும்போது, பாஜகவின் மேலவை உறுப்பினர் புக்கல் நவாப் கூறியபடி, ஹனுமர் ஒரு முஸ்லிம் எனக் கூறியதை பாஜக ஏற்கிறது எனில், அதற்காக அக்கட்சி மசூதிகளையும் கட்ட வேண்டி இருக்கும். இந்துக்கடவுளான ஹனுமருக்கு ஜாதி, மாதம் எதுவும் கிடையாது.’ எனத் தெரிவித்தார்.

 

இப்பிரச்சனையில் அமைதி காக்கும் பாஜக தலைலை, அதன் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்(ஆர்எஸ்எஸ்) ஆகியோரும் நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என சுவாமி தீர்த் வலியுறுத்தி உள்ளார்.

 

இது குறித்து சுவாமி தீர்த் கூறுகையில், ‘’ஹனுமர் மீதான சர்ச்சைக் கருத்துக்களுக்கு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் அமைதி காப்பதை பார்த்தால் அவர்களுக்கு ராமர் கோயில் என்பது ஒரு அரசியல் ஆயுதம் மட்டுமே எனக் கருத வேண்டி உள்ளது.’ எனத் தெரிவித்துள்ளார்.

 

இதனிடையில் உபியின் அயோத்யா, லக்னோ ஆகியவற்றில் ஹனுமர் கோயில் மற்றும் மடாதிபதிகளும் பாஜகவினர் செய்து வரும் ‘ஹனுமர் ஆய்வு’ மீது நேற்று கடும் அதிருப்தி தெரிவித்திருந்தது நினைகூரத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்