குஷ்வாஹா வெளியேறுவதால் கூடுதல் தொகுதிகளுடன் மாநிலங்களவை எம்.பி.யாகிறார் பாஸ்வான்

By ஆர்.ஷபிமுன்னா

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ராஷ்டிரிய லோக் சமதா கட்சித் தலைவர் விலகுவதால்  பார்டியின்(ஆர்எல்எஸ்பி) உபேந்திரா குஷ்வாஹா விலகுவதால், கூடுதல் தொகுதிகளுடன் மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்பு லோக் ஜன சக்தியின்(எல்ஜேபி) ராம்விலாஸ் பாஸ்வானுக்கு கிடைக்க உள்ளது.

தேஜமுயின் பிஹார் உறுப்பினர்களான ராம்விலாஸ் பாஸ்வான் மத்திய உணவுத்துறை அமைச்சராகவும், குஷ்வாஹா மனிதவளமேம்பாட்டுத்துறையின் இணை அமைச்சராகவும் பதவியேற்றனர். பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதால் கடந்த மக்களவை தேர்தலில் வெளியேறி இருந்த ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் அக்கூட்டணியில் மீண்டும் இணைந்துள்ளார்.

இதனால், கடந்தமுறை ஒதுக்கிய அளவிற்கு வரும் மக்களவை தேர்தலில் பாஸ்வானுக்கும், குஷ்வாஹுக்கும் தொகுதிகள் ஒதுக்க முடியாத நிலை பாஜகவிற்கு உள்ளது. இதன் காரணமாகவும், பிஹார் முதல்வர் நிதிஷுடனான மோதலாலும் குஷ்வாஹா லாலு பிரசாத் யாதவின் மெகா கூட்டணியில் சேர முடிவு செய்துள்ளார்.

எனவே, பாஸ்வானுக்கு ஒதுக்குவதாக இருந்த இரண்டை விட அதிமாக ஐந்து தொகுதிகள் கிடைக்க உள்ளது. இத்துடன் பாஸ்வானை மாநிலங்களவையின் எம்பியாகவும் பாஜக அமர்த்த இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் பாஸ்வான் கட்சியின் வட்டாரங்கள் கூறும்போது, ‘மக்களவை தேர்தலில் பாஜகவின் சில மாநிலங்களவை எம்பிக்கள் போட்டியிடுகின்றனர். இவர்கள் இடம் பாஸ்வானுக்கு கிடைக்கும். அவரது ஹாஜிபூர் தொகுதியில் மகன் சிராக் பாஸ்வான் போட்டியிடுவார். சிராகின் ஜமுவாயில் அவரது சித்தப்பாவான பசுபதி குமார் பராஸ் பாஸ்வான் நிறுத்தப்படுவார்.’ எனத் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்