ஒரே நேரத்தில் அனைத்து உறுப்பினர்களும் அமர முடியாமல் சாபத்துக்கு உள்ளாகி இருப்பதாக ராஜஸ்தான் சட்டப்பேரவை கட்டிடம் மீது அச்சம் நிலவுகிறது.
ராஜஸ்தானின் ஹவா மஹால் அருகே உள்ள சவாய் மான் சிங் டவுன் ஹாலில் சட்டப்பேரவை செயல்பட்டு வந்தது. பிறகு புதிய கட்டிடம் மார்ச் 2001 ல் ஜோதிநகர் பகுதியில் 16.96 ஏக்கரில் கட்டி முடிக்கப்பட்டது. இக்கட்டிடத்தில் தற்போது வரை ராஜஸ்தானின் மொத்த தொகுதி எம்எல்ஏக்கள் ஒன்றாக அமர முடிவதில்லை எனவும், இதற்கு அதன் மீது நிலவும் சாபம் காரணம் என்றும் சர்ச்சை நிலவுகிறது.
எனினும், இந்தமுறை டிசம்பர் 7-ல் 200 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவிருந்தது. ஆனால், கடந்த வியாழக்கிழமை அல்வர் மாவட்டத்தின் ராம்கர் தொகுதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் லஷ்மண் சிங், திடீரென இறந்தார். இதனால் அத்தொகுதியில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், அக்கட்டிடத்தின் சாபநிலை தொடர்வதாக மீண்டும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையில், அக்கட்டிடத்தில் வாஸ்து மாற்றி அமைத்தால் சரியாகி விடும் எனவும் ராஜஸ்தானின் வாஸ்து நிபுணர்கள், காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு ஆலோசனை அளித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
இந்தியா
23 mins ago
இந்தியா
5 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago