பாஜகவில் அதிருப்தியில் இருக்கும் வருண் காந்தியை இழுக்க காங்கிரஸ் முயற்சி

By ஆர்.ஷபிமுன்னா

பாஜகவில் அதிருப்தியில் இருக் கும் வருண் காந்தியை தங்கள் கட்சிக்கு இழுக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முயற்சி செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தியின் மறைவுக்கு பிறகு, காந்தி குடும்பத்தில் கருத்து வேறுபாடு எழுந்தது. இதனால் சஞ்சய் காந்தி மனைவி மேனகா பாஜகவில் சேர்ந்தார். அவர் இப்போது மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக உள்ளார். அவரது மகன் வருண், உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூர் தொகுதி எம்பியாகவும் உள்ளார். எனினும், சகோதரர் வருணுடன் ராகுல் காந்தியும் பிரியங்கா வதேராவும் அடிக்கடி சந்தித்து பேசி வருகின்றனர்.

இதனிடையே, 2014-ம் ஆண்டு அமித் ஷா தலைவரானது முதலே வருணுக்கு பாஜகவில் முக்கியத் துவம் குறைந்துவிட்தாகக் கூறப் படுகிறது. தேசிய பொதுச்செய லாளர் பதவியை வருண் இழக்க வேண்டியதாயிற்று. மேலும் கடந்த அக்டோபர் 2016-ல் பாதுகாப்புத்துறை தஸ்தாஜ்வேஜு களை வெளிநாட்டவருக்கு வழங்கி யதாக வருண் மீது புகார் எழுந்தது.

இதற்காக அவர் அழகிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்பட்ட புகாரையும் வருண் மறுத் திருந்தார். எனினும், 2017 உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலின் போது நட்சத்திர பிரச்சாரகர்கள் பட்டியலில் வருணுக்கு இடம் அளிக்கப்படவில்லை. இதனால், அதிருப்திக்கு உள்ளான வருணை தங்கள் பக்கம் இழுக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முயன்று வருகின்றனர். இதில், வருணின் தந்தை சஞ்சய்க்கு நெருங்கிய நண்பராக இருந்த ம.பி. முதல்வர் கமல்நாத் முன்னிலை வகிக்கிறார்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வட்டாரம் ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது, “மக்களவை தேர்தலில் தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என வருண் எண்ணு கிறார். இது உறுதியானால் அவர் காங்கிரஸுக்கு வந்துவிடுவார். இதற்கான முயற்சிகளைச் செய்து வருகிறோம். இவரது தாய் மேனகா காந்தியும் அவருடன் வருவார் அல்லது அரசியலில் இருந்து விலக வாய்ப்புள்ளது” என்றனர்.

தனது இரு மகன்களுடன் கமல்நாத்துக்கு இருந்த நெருக்கம் காரணமாக, அவரை இந்திரா காந்தி தனது மூன்றாவது மகன் எனவும் கூறி வந்தார். சஞ்சய் காந்தி அரசியலுக்கு வந்ததில் கமல்நாத்துக்கு முக்கியப் பங்கு இருந்தது. இதுபோல அவரது மகன் வருணையும் காங்கிரஸுக்கு இழுப்பதில் கமல்நாத் களமிறங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்