55 நாடுகள், 44 பயணம்: பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு ரூ.2 ஆயிரம் கோடிக்கும் அதிகம்

By ஷோபனா கே.நாயர்

கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து 55 நாடுகளுக்கு, 44 முறை பிரதமர் மோடி வெளிநாடுகளுக்குப் பயணித்துள்ளார், இந்த பயணத்துக்காக மத்திய அரசு ரூ.2 ஆயிரத்து 21 கோடி செலவு செய்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கைக்காட்டிலும் 10 நாடுகளுக்குக் கூடுதலாக பிரதமர் மோடி பயணித்துள்ளார். அவரின் வாடகைக்காக தனிப்பட்ட விமானச் செலவு மட்டும் ரூ. 429.28 கோடியாகும். மன்மோகன் சிங் விமானச் செலவு ரூ.493.22 கோடியாகும்.

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணத்துக்காக மத்திய அரசு செலவு செய்த தொகை குறித்து காங்கிரஸ் எம்.பி. சஞ்ச் சிங் கேள்வி மாநிலங்களவையில் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் எழுத்து பூர்வமாக மாநிலங்களவையில் நேற்று பதில் அளித்தார். அவர் கூறியதாவது:

கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி பதவி ஏற்றதில் இருந்து 55 நாடுகளுக்குப் பயணித்துள்ளார், 44 முறை வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் பிரதமர் மோடி பயணித்த முக்கிய 10 நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு ஏராளமான அன்னிய முதலீடுகள் கிடைத்துள்ளன. சில நாடுகளுக்குப் பல முறை பயணித்துள்ளார் மோடி.

கடந்த 4 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணத்துக்காக மத்தியஅரசு ரூ.2 ஆயிரத்து 21 கோடி செலவிட்டுள்ளது. இதில் பிரதமர் மோடியின் தனிப்பட்ட விமானத்துக்காக ரூ.429.25 கோடியும், பிரதமர் மோடி பயணிக்கும் விமானத்தின் பராமரிப்புச் செலவுக்கு ரூ.1,583.18 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. ஹாட்லைனுக்காக ரூ. 9.11 கோடி செலவிடப்பட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டுவரை இந்தியாவுக்கு 3,093 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில், பிரதமர் மோடியின் பயணத்தால், 2017-ம் ஆண்டு இது 4,347 கோடி டாலர்களாக அன்னிய முதலீடு அதிகரித்துள்ளது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 38 நாடுகளுக்கு அவரின் ஆட்சிக்காலத்தில் பயணித்துள்ளார். அவரின் தனிப்பட்ட விமானச் செலவு ரூ.493.22 கோடியாகும், விமானப் பராமரிப்புச் செலவுக்காக ரூ.842.6 கோடி செலவிடப்பட்டுள்ளது.

கடந்த 2014-15-ம் ஆண்டில் பிரமதர் மோடியின் தனிப்பட்ட விமானச் செலவு ரூ.93.76 கோடியாகவும், 2015-16-ம் ஆண்டில் ரூ.117.89 கோடியாகவும், 2016-17-ம் ஆண்டில் ரூ.76.27 கோடியாகவும், 2017-18-ம் ஆண்டில் ரூ.99.32 கோடியாகவும் உள்ளது. 2018-19-ம் ஆண்டில் டிசம்பர் 3-ம் தேதிவரை ரூ.42.01 கோடியாகும்.

இதில் இந்த ஆண்டு வெளிநாட்டு பயணத்தில் ரூ.19.32 கோடி  பணப்பற்றாக்குறை காரணமாக இன்னும் செலுத்தப்படாமல் இருக்கிறது.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்