ஹரியாணாவில் தனி குருத்வாரா கமிட்டி ஆதரவாளர்கள் 2-வது நாளாக தர்ணா

ஹரியாணா மாநிலம், குருஷேத் ராவில் தனி குருத்வாரா கமிட்டி தலைவர்கள் மற்றும் ஆதரவா ளர்கள் ஞாயிற்றுக்கிழமை 2-வது நாளாக தொடர் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

பஞ்சாப் மற்றும் ஹரியா ணாவில் உள்ள சீக்கிய குருத் வாராக்களை அமிர்தசரஸில் உள்ள சீக்கிய குருத்வாரா பிரபந்த கமிட்டி (எஸ்.ஜி.பி.சி) நிர்வகித்து வருகிறது.

இந்நிலையில் ஹரியாணாவில் உள்ள குருத்வாராக்களை நிர்வகிப் பதற்காக தனியாக ஹரியாணா மாநில குருத்வாரா பிரபந்த கமிட்டி (எச்.எஸ்.ஜி.பி.சி) ஏற்படுத்தி, அம்மாநில அரசு சட்டம் இயற்றியது. இதற்கு பஞ்சாபில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில் எச்எஸ்ஜிபிசி சட்டப்படி ஹரியாணாவில் உள்ள குருத்வாராக்களை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்கும் முயற்சியில், தனி குருத்வாரா ஆதரவு தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சனிக்கிழமை ஈடுபட்டனர்.

குருஷேத்ராவில் உள்ள செவின் பட்ஷாகி குருத்வாரா நோக்கி ஊர்வலமாக சென்ற இவர்கள், அதன் வாயிலில் அமர்ந்து, நிர்வாகத்தை தங்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி தர்ணா செய்தனர்.

இந்நிலையில் இவர்களின் போராட்டம் நேற்று இரண்டாவது நாளை எட்டியது. அங்கு பதற் றமான சூழ்நிலை நிலவுவதாகவும் ஆனால் நிலைமை கட்டுப் பாட்டில் இருப்பதாகவும் போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே சண்டீகரில் ஷிரோமணி அகாலி தளம் (பாதல்) கட்சியின் உயர்நிலை குழு, ஹரியாணா ஆளுநர் கேப்டன் சிங் சோலங்கியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து, “ஹரியாணா அரசு நிறைவேற்றியுள்ள தனி குருத்வாரா சட்டம் அரசியல் சாசன விரோதமானது. அதை மறு ஆய்வு செய்யவேண்டும்” என அவர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட இரு பிரிவினரும் அமைதி காக்கவேண்டும் என்று சீக்கிய மத தலைமை அமைப்பான அகால்தக்த் மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE