‘கஜா’ புயல் தீவிரமடைந்தால் ஜிஎஸ்எல்வி-மாக்3டி2 ராக்கெட் ஏவும் நேரம் மாற்றப்படலாம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

By என்.மகேஷ் குமார்

கஜா புயல் தீவிரமடைந்தால் இன்று விண்ணில் செலுத்தப்பட உள்ள ஜிஎஸ்எல்வி-மாக்3டி2 ராக்கெட் ஏவும் நேரத்தில் மாற்றம் நிகழலாம் என இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.

திருப்பதிக்கு நேற்று வந்த இஸ்ரோ தலைவர் கே. சிவன், ஏழு மலையானை தரிசித்தார். அப் போது, இன்று விண்ணில் ஏவப்பட உள்ள, ஜிசாட்-29, ஜிஎஸ் எல்வி-மாக்3டி2 ரக ராக்கெட்டின் மாதிரியை ஏழுமலையானின் பாதத் தில் வைத்து அவர் வழிபட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஜிஎஸ்எல்வி மாக் 3டி2 ராக்கெட் திட்டமிட்டபடி புதன்கிழமை (இன்று) மாலை 5மணி 8 நிமி டத்துக்கு ஸ்ரீஹரி கோட்டாவி லிருந்து விண்ணில் செலுத்தப் படும். வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள கஜா புயல் நாகப்பட்டினத்தை நோக்கி தற்போது நகர்ந்து வருகிறது. ராக்கெட் ஏவும் சமயத்தில், கரையில் இருந்து 400 கடல் மைல் தொலைவில் புயல் மையம் கொண்டிருக்கும்.

புயலின் போக்கில் மாற்றம் ஏற்பட்டால், ராக்கெட் செலுத்து வதை தள்ளி வைக்க வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு கே.சிவன் கூறினார்.

அதன் பின்னர், திருமலை யிலிருந்து கார் மூலமாக காளஹஸ்தி சிவன் கோயி லுக்கு சென்று வாயு லிங் கேஸ்வரரை அவர் தரிசனம் செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்