திருப்பதி கோயிலில் ஆந்திர அரசு அதிகாரம் செலுத்தக் கூடாது: சுவாமி வழக்கு விசாரணைக்கு ஏற்பு

By என்.மகேஷ் குமார்

திருமலை திருப்பதி தேவஸ்தான நிதியை ஆந்திர அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தியும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மீது ஆந்திர அரசு அதிகாரம் செலுத்த கூடாது என வலியுறுத்தியும் பாஜ மூத்த தலைவரான சுப்ரமணியன்சுவாமி, ஹைதராபாத் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது குறித்து இரு தரப்பிலும் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர். பின்னர் இவ்வழக்கு வரும் டிசம்பர் மாதம் 18-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் வழங்கும் காணிக்கைகளை, இந்து தர்மத்தின் அடிப்படையில், கோயில் தொடர்பாகவும், பக்தர்களின் வசதிக்காகவும் மட்டுமே பயன்படுத்த வேண்டியுள்ளது. ஆனால், ஆந்திர மாநில வளர்ச்சி திட்டங்களுக்காக பயன்படுத்துவதை எதிர்த்து தற்போது சுப்ரமணியன் சுவாமி இவ்வழக்கை தொடர்ந்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்