பிஹார் மாநில முன்னாள் அமைச்சர் மஞ்சு வர்மாவுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
பிஹார் மாநிலத்தில் மகளிர் காப்பகத்தில் தங்கியிருந்த 44 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதில் முக்கிய குற்றவாளியாக மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் மஞ்சு வர்மாவின் கணவர் சந்திரசேகர் தாக்கூர் என்பவர் சந்தேகிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து இவரது வீட்டில் சோதனை செய்யப்பட்டதில் கிட்டத்தட்ட 50 துப்பாக்கித் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தனது கணவர் சந்திரசேகர் தாக்கூர் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அமைச்சர் பொறுப்பிலிருந்து மஞ்சு வர்மா விலகினார். அதைத் தொடர்ந்து அவர் தலைமறைவானார்.
இநத்நிலையில் பிஹார் மாநிலத்தின் மஞ்சால் நீதிமன்றம் ஆயுதத் தடுப்புச் சட்டத்தின்படி மஞ்சு வர்மாவுக்கு எதிராக பிணையில் வெளிவரமுடியாத கைது உத்தரவை பிறப்பித்துள்ளது. அதனோடு அவரைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
முசாபர்நகர் காப்பக வழக்கில் முக்கிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் பிஹாரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago