பிரதமர் பதவிக்கு ராகுல் தகுதியானவர்: வீரப்ப மொய்லி கருத்து

By என்.மகேஷ் குமார்

பிரதமர் பதவிக்கு ராகுல்காந்தி எல்லாவிதத்திலும் தகுதியானவர் என முன்னாள் கர்நாடக முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான வீரப்ப மொய்லி கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வீரப்ப மொய்லி நேற்று ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தாவது:

பாஜகவை எதிர்த்து போராடு பவர்களில் பிரதமராக ராகுல்காந்தி தகுதியானவர். பிரதமராவதற்கு ராகுல்காந்திக்கு எல்லா விதத்திலும் தகுதி உள்ளது. பாஜக கூட்டணியில் இருந்து பல்வேறு கட்சிகள் வெளியேறுவதால், நாடு முழுவதிலும் கிராம அளவில் காங் கிரஸ் பலம் பெற்று வருகிறது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் மாபெரும் வெற்றிபெறும் என நம்புகிறேன்.

மோடிக்கு எதிராக ஒன்று சேர்ந்து பாஜகவை எதிர்ப்பதுதான் தற்போதைய செயல்திட்டமாகும், இதில் யார் பிரதமர் வேட்பாளர் என ஆராய்வது தவறு. இவ்வாறு வீரப்ப மொய்லி கூறினார்.

நேற்று அவர் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக தெலங் கானா மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

மேலும்