சிம்லாவில் நீதிமன்றம் அருகே சுற்றி வந்த வெள்ளைச் சிறுத்தைக்குட்டி மீட்பு

By ஏஎன்ஐ

இமாச்சல பிரதேச மாநிலத்தின் தலைநகர் சிம்லாவில், எங்கிருந்தோ வந்து நீதிமன்ற வளாகத்தின் அருகில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த வெள்ளைச் சிறுத்தைக்குட்டி இன்று மீட்கப்பட்டது.

இச்சிறுத்தைக்குட்டி வாகனங்கள் நிறுத்தும் பகுதியில் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தது. அப்போது ஒருவர் அங்கு வாகனம் எடுக்க வந்தபோது அதைக் கண்டு முதலில் அதிர்ச்சியடைந்தவர் அது குட்டிதான் என்றறிந்து ஆசுவாசமடைந்தார். பின்னர் அருகிலிருந்து அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

அதன்பின் தகவல் அறிந்த வனத்துறை ஊழியர்கள் வந்து வாகனம் ஒன்றின் கீழே பதுங்கியிருந்த வெள்ளைச் சிறுத்தைக்குட்டியை மீட்டுச் சென்றனர்.

இம்மாநிலத்தின் வனப்பகுதியில் தற்போது வெள்ளைச் சிறுத்தைகள் கணிசமான எண்ணிக்கையில் உயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இவ்வகையான சிறுத்தை இனங்கள் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த கோமிக், ஹிக்கிம், கிப்பார், பாங்கி, மியார் மற்றும் தேமுல் வனப்பிரதேசங்களில் அதிக அளவிலும் அதனைச் சுற்றி பல இடங்களிலும் காணப்படுகின்றன.

இமாச்சலப் பிரதேச மக்கள் தங்கள் வாழ்விடத்தைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்காக மலையகப் பகுதிகளில் சிறுத்தைகளை பேணிப் பாதுகாத்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

46 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்