தற்காப்புக்கான உரிமை சமூக நோக்கத்துடன் கூடிய மிக மதிப்புமிக்க உரிமை என்று உச்ச நீதிமன்றம் வழக்கு ஒன்றின் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
அதாவது தன் உயிரைக் காத்துக்கொள்ள எதிரி மீது அளவுக்கதிகமாக தாக்குதல் நடத்தி அதனால் உயிரிழப்பு ஏற்பட்டால் அது தற்காப்பாளரை கொலைகாரர் ஆக்காது மாறாக மரணம் சம்பவிக்கக் காரணமான குற்றம் என்றுதான் எடுத்துக் கொள்ள முடியும் என்று 1991ம் ஆண்டு வழக்கு ஒன்றில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம்
மேலும் தன் உயிரைக் காத்துக் கொள்வதற்கான உரிமை என்பது சமூக நோக்கத்துக்குரிய ஒரு மிக மதிப்புடைய உரிமை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
என்.வி.ரமணா மற்றும் மோகன் எம். சந்தானகவுடர் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு 1991 வழக்கு தொடர்பாக இந்தத் தீர்ப்பை அளித்துள்ளது.
கொலைச் சம்பவத்தில் தற்காப்பு என்பது சட்டப்பிரிவு 300-ல் விதிவிலக்காக வைக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிரி ஒருவரின் உடனடியான அச்சுறுத்தலுக்கு பழிவாங்கும் செயலாகச் செய்யும் போது அது குற்றமே. இங்கு தற்காப்பு என்பது எடுபடாது.
1991 வழக்கு என்ன?
பஞ்சாப் மாநிலத்தின் ஊர்க்காவல்படையைச் சேர்ந்த இருவர் தொடர்பான ரூ.100 கடன் பாக்கி விவகாரத்தில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜங்கீர் சிங் இவர் தன் சக ஊர்க்காவல்படையைச் சேர்ந்த ஜஸ்வந்த் சிங் என்பவரை துப்பாக்கியால் சுட்டுக் கொண்றார். ஜஸ்வந்த் சிங்கிடம் ரூ.100 கடன் வாங்கியுள்ளார் ஜங்கீர் சிங், இதனை ஜஸ்வந்த் சிங் அனைவர் முன்னிலையிலும் தன்னிடம் திருப்பிக் கேட்டார் என்று இருவருக்கும் இடையே தகராறு நீண்டுள்ளது, தகராறின் முடிவில் ரூ.100க்காக ஜஸ்வந்த் சிங்கை ஜங்கீர் சிங் சுட்டுக் கொலை செய்துள்ளார். நேரில் பார்த்த சாட்சியங்கள் யார் முதலில் துப்பாக்கி விசையை அழுத்துவார் என்ற விவகாரம் இது என்று தெரிவித்தனர். அதாவது இருவரும் ஒருவரையொருவர் குறிவைத்துக் கொண்டிருந்தனர் என்றனர். ஆனால் ஜங்கீர் சிங் விசையை அழுத்த அது ஜஸ்வந்த் சிங் மார்பில் பாய்ந்து மரணம் சம்பவித்துள்ளது.
இந்த வழக்குத் தொடர்பான 1993 விசாரணை நீதிமன்ற தீர்ப்பு ஜங்கீர் சிங் தற்காப்புக்காகவே ஜஸ்வந்த் சிங்கைச் சுட்டார் என்று தீர்ப்பளித்து விடுதலை செய்தது. ஆனால் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம் ஜங்கிர் சிங் கொலையாளி என்று தீர்ப்பளித்தது. ஆயுதங்கள் சட்டத்தைப் பயன்படுத்தி ஜங்கீர் கொலைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.
இந்த வழக்கில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது, ஜங்கீர் சிங் தற்காப்புக்காகச் சுட்டதாக வகைப்படுத்தலாம், ஆனால் நண்பரை, சகக்காவலரை மார்பில் சுட்டது மூலம் அளவுக்கதிகமாக தீங்கிழைத்தார், “குற்றவாளி முக்கிய உறுப்பை நோக்கி சுட்டிருக்கக் கூடாது” என்று கூறி ஜங்கீர் சிங்கை உடனடியாக விடுதலை செய்யுமாறு தீர்ப்பளித்தனர், இந்த வழக்கில் ஜங்கீர் சிங் ஏற்கெனவே 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்தார். மரணம் விளைவிக்கும் குற்றத்துக்கான தண்டனைக்காலம் 10 ஆண்டுகளே.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago