தன்னை கொல்ல சதி நடந்ததாக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தார்.
ஜெகன்மோகன் ரெட்டி மீது கடந்த 25-ம் தேதி விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் தாக்குதல் நடந்தது. இது தொடர்பாக ஆந்திர போலீஸாருக்கு வாக்குமூலம் கொடுக்க ஜெகன் மறுத்துவிட்டார். இந்நிலையில் ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் ஜெகன் நேற்று தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
மக்களின் பிரச்சினையை கேட்டறிய பாதயாத்திரை மேற்கொண்டுவருகிறேன். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என்னை கொலை செய்ய சதி நடந்துள்ளது. விமானநிலையத்தில் நான் காத்திருந்தபோது, கேண்டீன் ஊழியர் ஒருவர் செல்ஃபி எடுக்க விரும்புவதாகக் கூறி என்னை கொல்ல முயன்றார். அவர் கத்தியால் என் கழுத்தை குறி பார்த்து குத்த வந்தார். நான் சற்று குனிந்து விலகியதால், அது என் இடது கையில் குத்தியது. உடனடியாக குற்றவாளியை போலீஸார் கைது செய்தனர். ஆயினும் ஒரு மணி நேரத்தில், இது அரசியல் நாடகம் என ஆந்திர டிஜிபி கூறினார். குற்றவாளி எங்கள் கட்சியைச் சேர்ந்தவர் என்று நிரூபிக்க ஆந்திர அரசும், போலீஸாரும் முயற்சிக்கின்றனர். ஆந்திர போலீஸார் நடத்தும் விசாரணையில் எனக்கு நம்பிக்கை இல்லை. இதற்கு பதிலாக ஆந்திர அரசுக்கு தொடர்பில்லாத புலனாய்வுத் துறை மூலம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை உயர் நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
22 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago