திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் கோலாகல தொடக்கம்

By என்.மகேஷ் குமார்

திருப்பதி ஏழுமலையான் கோயி லில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு 3 ஆண்டு களுக்கும் ஒருமுறை 2 பிரம்மோற் சவங்கள் நடத்துவது ஐதீகம். இந்த ஆண்டு இதுபோன்று 2 பிரம்மோற்சவங்கள் நடத்தப் படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 13-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் மிகவும் பிரம்மாண்டமான முறை யில் நடந்தது. இதில் சுமார் 6 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து தற்போது, நேற்று முதல் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக தொடங்கியது. இவ்விழா, வரும் 18-ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் முதல் நாளான நேற்று காலை உற்சவ மூர்த்திகளான தேவி, பூதேவி சமேதராய் மலையப்பர் தங்க திருச்சியில் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனை தொடர்ந்து நேற்று மாலை ஊஞ்சல் சேவை நடைபெற்றது. பின்னர் இரவு, ஆதிசேஷனாக கருதப்படும் பெரிய சேஷ வாகனத்தில் உற்சவ மூர்த்திகள் வாகன மண்டபத்தில் எழுந்தருளி, 4 மாட வீதிகளிலும் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். வாகன சேவையின் முன், காளை, குதிரை, யானை போன்ற பரிவட்டங்கள் செல்ல, இதனை தொடர்ந்து பல மாநில நடன குழுவினரின் நடன நிகழ்ச்சிகள் நடந்தன.

நவராத்திரி பிரம்மோற்சவத்தை யொட்டி, திருமலையில் மலர் கண்காட்சி, புகைப்பட கண்காட்சி போன்றவைகளை தேவஸ்தானம் ஏற்பாடு செய்திருந்தது. மேலும், பிரம்மோற்சவத்தால், திருமலை முழுவதும் பல வண்ண விளக்கு களாலும், மலர்களாலும் அலங் காரம் செய்யப்பட்டுள்ளது. திருப் பதி நகரிலும் பஸ் நிலையம், ரயில் நிலையம் மற்றும் முக்கிய இடங்களிலும் அலங்கார வளைவுகள், மின் அலங்காரங்கள் செய்யப்பட்டு திருமலை மற்றும் திருப்பதி விழாக்கோலம் பூண்டுள்ளது. நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 2-ம் நாளான இன்று காலை, சின்ன சேஷ வாகனம், இரவு அன்ன வாகன சேவை நடைபெற உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்