அமராவதியில் ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசக் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று பேட்டி யளித்தார். அதில் அவர் கூறி யிருப்பதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி மீது மக்களுக்கு பரவலாக கோபம் ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் மக்கள் இதற்கு தீர்ப்பளிப்பார்கள்.
நாட்டு நலனுக்காக பாடுபடும் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இதுதொடர்பாக கர்நாடக முதல்வர் குமாரசாமி உள்ளிட்ட பல முக்கிய கட்சித் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளேன்.
தேர்தலுக்கு முன்பு, பிரதமர் வேட்பாளரை மூன்றாவது கூட்டணி அறிவிக்காவிட்டாலும் பிரச்சினை இல்லை என்பதே எனது கருத்தாகும். முன்கூட்டியே பிரதமர் வேட்பாளரை அறிவிப் பதன் மூலம், எதிர் அணியினர் அந்த வேட்பாளர் மீது தேவை யில்லாமல் குற்றச்சாட்டுகளைக் கூற வாய்ப்புள்ளது. எனக்கு பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. ஆனால், மூன்றாவது அணியை உருவாக்கு வேன் என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 mins ago
இந்தியா
47 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago